மாசி மக பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று புனித நீராடிய பக்தர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |

 
ஆன்மிகம்

கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: மாசிமகப் பெரு​விழாவையொட்டி கும்​பகோணம் மகாமக குளத்​தில் 11 சிவன் கோயில்​களின் தீர்த்​த​வாரி உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு புனித நீராடினர்.

மாசி மகத்​தையொட்டி கும்​பகோணத்​தில் உள்ள ஆதி​கும்​பேஸ்​வரர், காளஹஸ்​தீஸ்​வரர், வியாழ சோமேஸ்​வரர், காசி விஸ்வ​நாதர், அபி​முகேஸ்​வரர், கவுதமேஸ்​வரர், திருப்​புறம்​பி​யம் சாட்​சி​நாத சுவாமி ஆகிய கோயில்களில் பிப்​.21-ம் தேதி​யும், சக்​கர​பாணி சுவாமி, ராஜகோ​பாலசு​வாமி, ஆதிவ​ராக பெரு​மாள் ஆகிய 3 பெரு​மாள் கோயில் களில் 22-ம் தேதி​யும் கொடியேற்​றம் நடை​பெற்​றது.

          

இதைத்​தொடர்ந்து 7 சிவன் கோயில்​களில் நேற்று முன்​தினம் தேரோட்​டம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், கும்​ப கோணத்தில் உள்ள 11 சிவன் கோயில் சுவாமிகள் நேற்று பஞ்ச மூர்த்​தி​களு​டன், கோயி​லில் இருந்து வீதி​யுலா​வாகப் புறப்​பட்​டு, மகாமக குளக்​கரைக்கு வந்​தடைந்​தனர்.

பின்​னர், குளத்​தில் அஸ்​திரத் தேவருக்கு பல்​வேறு வகை​யான மங்​கலப் பொருட்​களால் அபிஷேகம் செய்​யப்​பட்டு தீர்த்​த​ வாரி நடைபெற்றது. அப்​போது, அங்கு திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் மகாமக குளத்​தில் புனித நீராடினர்.

இதே​போல திரு​புறம்​பி​யம் கரும்​படு சொல்​லி​யம்மை உடனாய சாட்​சி​நாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்​தத்​தில் தீர்த்​த​வாரி நடை​பெற்​றது.

தொடர்ந்​து, சுவாமிகளுக்கு தீபா​ராதனை காட்​டப்​பட்டு மீண்​டும் கோயில்​களுக்கு புறப்​பட்டுச் சென்​றனர். நிகழ்ச்​சி​யில், எம்​எல்ஏ சாக்​கோட்டை க.அன்பழகன், அறநிலை​யத்​துறை துணை ஆணை யர் உமாதே​வி உள்பட ஏராளமானோர் பங்​கேற்​றனர்.

தேரோட்​டம்

இதே​போல, கும்​பகோணத்​தில் உள்ள சக்​கர​பாணி சுவாமி, ராஜகோ​பால சுவாமி, ஆதிவ​ராக பெரு​மாள் ஆகிய 3 பெரு​மாள் கோயில்​களில் நேற்று தேரோட்​டம் நடை​பெற்​றது.

மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

முன்​ன​தாக சுதர்​சனவல்​லி, விஜய​வல்லி தாயார்​களு​டன் சக்​கர​பாணி சுவாமி, பாமா, ருக்​மணி உடனாய ராஜகோ​பால சுவாமி, அம்​புஜவல்லி தாயார் உடனாய ஆதிவராக பெரு​மாள் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்​தருளி​னார்.

தொடர்ந்​து, ஏராள​மான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். பின்னர், பொற்​றாமரை குளத்​தில் நடந்த தெப்ப உற்​சவத்தில் உபய​நாச்​சி​யாருடன் பெரு​மாள் எழுந்​தருளினர்.

SCROLL FOR NEXT