கரையில் எழுந்தருளிய நம் பெருமாள்.

 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்

ரங்​க​நாதர் கோயி​லில் இன்று நம்மாழ்வார் மோட்சம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழாவையொட்டி நேற்று தீர்த்​த​வாரி உற்​சவம் நடை​பெற்​றது. விழா​வின் மற்​றொரு முக்​கிய நிகழ்​வான நம்​மாழ்​வார் மோட்ச வைபவம் இன்று (ஜன. 9) நடை​பெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா கடந்த டிச. 19-ம் தேதி திருநெடுந்​தாண்​டகம் உற்​சவத்​துடன் தொடங்​கியது. மறு​நாள் தொடங்​கிய பகல்​பத்து உற்​சவத்​தின்​போது பல்​வேறு அலங்​காரங்​களில் நம்​பெரு​மாள் அர்ச்​சுன மண்​டபத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு சேவை சாதித்​தார்.

கடந்த டிச. 29-ம் தேதி நாச்​சி​யார் திருக்​கோலம் எனப்​படும் மோகினி அலங்​காரத்​தில் நம்​பெரு​மாள் காட்​சி​யளித்​தார். டிச. 30-ம் தேதி அதி​காலை விழா​வின் முக்​கிய நிகழ்​வான பரமபத வாசல் எனப்​படும் சொர்க்​க​வாசல் திறப்பு விழா வெகு​விமரிசை​யாக நடை​பெற்​றது.

அன்று தொடங்​கிய ராப்​பத்து உற்​சவத்​தில் தின​மும் பிற்​பகல் மூலஸ்​தானத்​தில் இருந்து பல்​வேறு வகை​யான அலங்​காரங்​களில் புறப்​பாடு கண்​டருளிய நம்​பெரு​மாள், ஆயிரங்​கால் மண்​டபத்​தில் ஆஸ்​தானமிருந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவத்தில் 10-வது நாளான நேற்று சந்திரபுஷ்கரணி குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம்.

ராப்​பத்து உற்​சவத்​தின் 10-ம் நாளான நேற்று தீர்த்​த​வாரி நடை​பெற்​றது. இதையொட்​டி, காலை 9 மணிக்கு மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பாடு கண்​டருளிய நம்​பெரு​மாள், பரமபத வாசல் கடந்து சந்​திர புஷ்கரணியை சென்​றடைந்​தார்.

அங்கு நம்​பெரு​மாள் சார்​பில் தீர்த்​த​பேரர் எனப்​படும் சின்ன பெரு​மாளுக்கு தீர்த்​த​வாரி நடை​பெற்​றது. தொடர்ந்​து, நம்​பெரு​மாள் ஆயிரங்​கால் மண்​டபத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு சேவை சாதித்​தார். மாலை 6.30 மணிக்கு பொதுஜன சேவை​யுடன் நம்​பெரு​மாளுக்கு திரு​மஞ்​சனம் நடை​பெற்​றது.

இன்று (ஜன.9) அதி​காலை 3 மணி வரை அரையர் சேவை, திருப்​பா​வாடை கோஷ்டி நடை​பெறுகிறது. காலை 6 மணிக்கு நம்​மாழ்​வார் மோட்ச வைபவம் நடை​பெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஆயிரங்​கால் மண்டபத்​தில் இருந்து புறப்​படும் நம்​பெரு​மாள் 10.30 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகிறார்.

நாளை (ஜன.10) அதி​காலை 4 மணிக்கு இயற்பா சாற்​று​முறை​யுடன் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா நிறைவடைகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT