மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். தடுமாற்றம் நீங்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்.

ரிஷபம்: பணவரவு உண்டு. பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். எதிர்காலத்தை பற்றிய பயம் விலகும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நிம்மதியுண்டு. பணப்புழக்கம் கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். உடல் நலத்திலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவர். லாபம் உண்டு.

விருச்சிகம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபார ரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

தனுசு: குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர். பெற்றோரின் உடல் நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். பணிச்சுமை கூடும்.

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு தருவார்கள். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

கும்பம்: பழைய கடன் பிரச்சினைகளில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் எதிலும் பட்டும் படாமல் இருப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படவும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நண்பர்களால் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 ஜனவரி 2026
ஜோதிட நாள்காட்டி 09.01.2026 | மார்கழி 25 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in