ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்நிதியை வானமாமலை ஜீயர் மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்.

 
ஆன்மிகம்

ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் பதவி வில​குவதாக அறிவிப்பு

மணவாள மாமுனிகள் சந்நிதி வானமாமலை மடம் வசம் ஒப்​படைப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்​லிபுத்​தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சந்​நிதி 24-வது பட்​டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், சொந்​தக் காரணங்​களுக்​காக பொறுப்​பில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூர் மணவாள மாமுனிகள் சந்​நிதி 24-வது பட்​டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று இதுகுறித்து செய்​தி​யாளர்களிடம் கூறிய​தாவது: மணவாள மாமுனிகள் மடத்​தின் மீது 23-வது ஜீயர் சுவாமிகளால் சந்​நி​யாச தீட்சை வழங்​கப்​பட்​டு, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் என்ற பட்​டத்​துடன் 2015-ம் ஆண்டு முதல் 24-வது பீடா​திப​தி​யாகச் செயல்​பட்டு வந்​தேன்.

மணவாள மாமுனிகள் மடம், வான​மாமலை மடம் இடையே​யான வழக்கு நீதி​மன்​றத்​தில் நடந்​து ​வந்​தது. இதனிடையே, 23-வது பட்​டம் ஜீயர் சுவாமிகள் மடத்தை வான​மாமலை மடத்​தின் வசம் ஒப்​படைப்​ப​தாக நீதி​மன்​றத்​தில் தெரி​வித்து 2024 டிசம்​பரில் வழக்​கைத் திரும்​பப் பெற்​றார். இந்​நிலை​யில், மணவாள மாமுனிகள் சந்​நி​தி​யில் திருப்​பணி​களை முடித்து கும்​பாபிஷேகம் நடத்​திய பிறகு முறைப்​படி ஒப்​படைப்​ப​தாகத் தெரி​வித்​திருந்​தேன். அதன்​படி அண்​மை​யில் கும்​பாபிஷேகம் முடிவடைந்​தது. இதையடுத்​து, இன்று (நேற்​று) மடத்​தின் நிர்​வாகத்தை வான​மாமலை ஜீயர் மடத்​தின் வசம் ஒப்​படைக்​கிறேன். சொந்​தக் காரணங்​களுக்​காக மடத்​தின் 24-வது பட்​டத்​தின்பொறுப்​பில் இருந்து வில​கு​கிறேன். இவ்​வாறு ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

வான​மாமலை மடத்​தின் வழக்​கறிஞர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: வான​மாமலை மடத்​துக்கு உட்​பட்​டது​தான் ஸ்ரீவில்​லிபுத்​தூர் மணவாள மாமுனிகள் சந்​நி​தி. இங்கு தொடக்க காலத்​தில் இருந்து வான​மாமலை மடம் சார்​பில் ஜீயர்​கள் நியமிக்​கப்​பட்டு வந்​தனர். 23-வது பட்​டம் ஜீயர் சுவாமிகள், 24-வது பட்​ட​மாக ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகளை நியமித்​தார். அவரை 24-வது பட்​ட​மாக வான​மாமலை மடம் ஏற்​றுக் கொண்​டது. தற்​போது அவர் சொந்​தக் காரணங்​களுக்​காக பட்​டத்​திலிருந்து வில​கு​வ​தாகத் தெரி​வித்​துள்​ளார். இதனால், வான​மாமலை மடம் சார்​பில் 25-வது பட்​டம் தேர்வு செய்​யப்​பட்டு விரை​வில்​ நியமிக்​கப்​படு​வார்​. அது​வரை தற்​​காலிக நிர்​​வாகி​யாக ரெங்​க​ராஜன்​ செயல்​படு​வார்​. இவ்வா​று கூறி​னார்​.

SCROLL FOR NEXT