தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். | படங்கள்: ம.பிரபு |

 
ஆன்மிகம்

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்ப் புத்​தாண்டை முன்​னிட்டு கோயில்​களில் சிறப்பு வழிபாடு நடை​பெற்​றது. இதில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்​தனர்.

சித்​திரை மாதப் பிறப்​பான நேற்​று, தமிழ் புத்​தாண்டு தமிழகம் முழு​வதும் உற்​சாக​மாகக் கொண்​டாடப்​பட்​டது. சென்​னை​யின் முக்​கிய கோயில்​களில் சிறப்பு அபிஷேகங்​கள், ஆராதனை​கள் மற்​றும் பஞ்​சாங்​கம் வாசித்​தல் என ஆன்​மிக நிகழ்​வு​கள் களை​கட்​டின.

          

வடபழனி முரு​கன் கோயி​லில், அதி​காலை 4 மணிக்கே நடை திறக்​கப்​பட்​டு, பள்​ளியறை பூஜை​யுடன் வழி​பாடு​கள் தொடங்​கின. மூல​வர் முரு​கப்​பெரு​மான் காலை​யில் தங்க நாணயக் கவசம் மற்​றும் தங்​கவேலுடன் ஜொலித்​தார்.

உச்​சிக்​கால பூஜை​யில்ராஜ அலங்​கார​மும், மாலை​யில் புஷ்ப அங்​கி​யும் சாத்​தப்​பட்டு பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். இரவு 10 மணி வரை ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் நின்று தரிசனம் செய்​தனர்.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெசன்ட் நகர் அஷ்டலட்​சுமி கோயி​லில், அஷ்டலட்​சுமி சந்​நி​தி​களில் சிறப்பு திரு​மஞ்​சனம் மற்​றும் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. காலை மற்​றும் மாலை வேளை

​களில் திரளான பக்​தர்​கள் வருகை தந்து அன்னை அஷ்டலட்​சுமியை வழிபட்​டனர்.

‘வடசபரி’ என்று அழைக்​கப்​படும் ராஜா அண்​ணா​மலைபுரம் ஐயப்​பன் கோயி​லில் விஷு கனி தரிசனம் கண்​கொள்​ளாக் காட்​சி​யாக அமைந்​தது. கோயில் முழு​வதும் வண்​ணமய​மான பழங்​கள் மற்​றும் காய்​கறிகளால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது. புத்​தாண்டை முன்​னிட்டு 18-ம் படி திறக்​கப்​பட்​டு, நெய் அபிஷேகம் நடை​பெற்​றது.

திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள், மயிலை கபாலீஸ்​வரர், தியாக​ராய நகர் வெங்​கடேஸ்வர பெரு​மாள் மற்​றும் பத்​மாவதி தாயார் கோயில்​களில் சிறப்​புப் பூஜைகள் நடந்​தன.

அதே​போல் திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர், மாங்​காடு காமாட்சி அம்​மன், குன்​றத்​தூர் முரு​கன் கோயில், சிறு​வாபுரி முரு​கன் கோயில் என சென்னை மற்​றும் புறநகரின் அனைத்து கோயில்​களி​லும் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

வெயி​லின் தாக்​கத்​தைக் குறைக்க ஆங்​காங்கே பந்​தல்​கள் அமைக்​கப்​பட்​டு, பானகம், நீர் மோர் மற்​றும் பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்​டன. பல கோயில்​களில் புத்​தாண்​டுப் பலன்​களைத் தெரிந்​து​கொள்ள பஞ்​சாங்​கம் வாசிக்​கும் நிகழ்​வும், தேர்ப்​பவனி​யும் நடை​பெற்​றன.

கோயில்​கள் மட்​டுமின்றி வீடு​களி​லும் புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பூஜை அறை​யில் கண்​ணாடி, நவதானி​யங்​கள், பழங்​கள் மற்​றும் ஆபரணங்​களை வைத்து ‘சித்​திரை கனி காணும்’ நிகழ்வை மக்​கள் கடைபிடித்​தனர்.

இறைவனுக்​குப் படையலிட்டு வணங்​கிய பின், பெரிய​வர்​களின் பாதங்​களைத் தொட்டு ஆசி பெற்று தங்​களது மகிழ்ச்​சி​யைப் பகிர்ந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT