இயேசு உயிர்த்தெழுந்த காட்சி.

 
ஆன்மிகம்

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: ஈஸ்​டர் பண்​டிகை​யையொட்​டி, வேளாங்கண்ணி பேரால​யத்​தில் நேற்று நடை​பெற்ற சிறப்பு பிரார்த்​தனை​யில் ஆயிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

புனித வெள்​ளியன்று சிலு​வையில் அறையப்​பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்​தெழுந்த தினம் ஈஸ்​டர் பண்​டிகை​யாக, உலகம் முழு​வதும் உள்ள கிறிஸ்​தவர்​களால் கொண்​டாடப்​படு​கிறது.

          

அதன்​படி, வேளாங்கண்​ணி​யில் உள்ள பிரசித்​திப்பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் ஈஸ்டர் பண்​டிகை நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்​டி, நேற்று அதி​காலை சிறப்​புப் பிரார்த்​தனை நடை​பெற்​றது. முன்​ன​தாக, பேரால​யத்​தின் கலை​யரங்​கில் நேற்று முன்​தினம் இரவு 11.45 முதல் பாஸ்கா திரு​விழிப்பு திருப்​பலி நடை​பெற்​றது.

மெழுகு​வர்த்​தி​களை கையில் ஏந்​தி​யபடி ஆயிரக்​கணக்​கானோர் பிரார்த்​தனை செய்​தனர். தொடர்ந்​து, நள்​ளிரவு 12 மணி முதல் அதி​காலை 2 மணி வரை ஈஸ்​டர் சிறப்பு பிரார்த்​தனை நடை​பெற்​றது. இதில், இயேசு உயிர்த்​தெழுந்த நிகழ்​வு​கள் தத்​ரூப​மாக காட்​சிப்​படுத்​தப்​பட்​டன.

இயேசு உயிர்த்​தெழும் காட்​சி​யின்​போது வாணவேடிக்கை நடத்​தப்​பட்​டு, பேரால​யம் வண்ண விளக்​கு​களால் மிளிர்ந்​தது. தொடர்ந்​து, திவ்ய நற்​கருணை ஆராதனை நிறைவேற்​றப்​பட்​டது.

வேளாங்கண்ணியில் நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ் உள்ளிட்டோர்.

திருச்​சடங்​கு​களை பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் பங்​குத் தந்தை அற்​புத​ராஜ் உள்​ளிட்டோர் நடத்​தினர். மேலும், தமிழ், மலை​யாளம், கொங்கணி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்​ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்​றன.

இதில் தமிழகம் மட்​டுமின்றி வெளி​மாநிலங்​கள், வெளி​நாடு​களில் இருந்​து ஆயிரக்​கணக்​கான கிறிஸ்​தவர்​கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT