கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மின்னொளியில் காட்சியளித்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

 
ஆன்மிகம்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா​வில் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் நாளை (நவ.15) நடை​பெறுகிறது. இதையடுத்து, திருச்​செந்​தூரில் பக்​தர்​கள் குவிந்த வண்​ணம் உள்​ளனர்.

முருகப் பெரு​மானின் அறு​படை வீடுகளில் ஒன்​றான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்த சஷ்டி திரு​விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்​கியது. நான்​காம் நாளான நேற்று காலை யாகசாலை​யில் சுவாமி ஜெயந்​திநாதர் மற்​றும் வள்ளி, தெய்​வானை அம்​பாள்​களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்​காரத்​துடன் தீபாராதனை நடை​பெற்​றது. பின்​னர், வள்ளி, தெய்​வானையுடன் சுவாமி ஜெயந்​திநாதர் தங்க சப்​பரத்​தில் சண்​முக​வி​லாச மண்​டபத்​துக்கு எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் நாளை (நவ.15) ஞாயிற்​றுக்​கிழமை மாலை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு அதி​காலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதி​காலை 2 மணிக்கு உதய​மார்த்​தாண்ட அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலை​யில் தீபாராதனை நடை​பெறும்.

பகல் 12.45 மணிக்கு யாகசாலை​யில் இருந்து ஜெயந்​திநாதர் எழுந்​தருளி, வேல் வகுப்பு, வீர​வாள் வகுப்பு முதலிய பாடல்​களு​டன், மேளவாத்​தி​யங்​களு​டன் சண்​முக​வி​லாசம் சேர்​தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடை​பெறும்.

பிற்​பகல் 2 மணிக்கு மேல் திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​தில், ஜெயந்​திநாதருக்கு அபிஷேக, அலங்​காரம் நடை​பெறும். மாலை 4 மணி​யளவில் ஜெயந்​திநாதர் சூரசம்​ஹாரத்​துக்​காக கடற்​கரையில் எழுந்​தருள்​வார். அங்கு சூரசம்​ஹாரம் நடை​பெறும். இந்​நிகழ்ச்​சி​யில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொள்​வார்​கள்.

நவம்​பர் 16-ம் தேதி அதி​காலை 5.30 மணிக்கு தெய்​வானை அம்​மன் தபசுக்கு புறப்​படுதல், மாலை 6 மணிக்கு அம்​மனுக்கு, சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்​றுதல், இரவு 11 மணிக்கு மேல் சுவாமிக்​கும், தெய்​வானை அம்​மனுக்​கும் திருக்​கல்​யாண வைபவம் நடை​பெறும்.

சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் இருந்​தும் பக்​தர்​கள் திருச்​செந்​தூரில் குவியத் தொடங்​கி​யுள்​ளனர். பக்​தர்​களுக்கு தேவை​யான வசதி​களை கோயில் நிர்​வாகம், மாவட்ட நிர​வாகம், காவல் துறை, நக​ராட்சி நிர்​வாகம் உள்​ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செய்​துள்​ளன. ஏற்​பாடுகளை கோயில் அறங்​காவலர் குழு தலை​வர் அருள்​முருகன், இணை ஆணை​யர் அருணாச்​சலம் மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT