திருநாகேஸ்வரம் கோயிலில் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாகவல்லி, நாகக்கன்னி உடனாய ராகு பகவான். (அடுத்த படம்) மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பலங்காரத்தில் எழுந்தருளிய கேது பகவானுக்கு காட்டப்பட்ட மகா தீபாராதனை.படம்: சி.எஸ்.ஆறுமுகம்

 
ஆன்மிகம்

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

கும்பகோணம்/மயிலாடுதுறை: திருநாகேஸ்வரம், கீழப்​பெரும்​பள்​ளம் கோயில்​களில் ராகு- கேது பெயர்ச்சி விழா நேற்று விமரிசையாக நடை​பெற்​றது.

ஒன்​றரை ஆண்​டுகளுக்கு ஒரு​முறை ராகு, கேது பெயர்ச்சி நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, நேற்று மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசி​யில் இருந்து மகர ராசிக்​கும், கேது பகவான் சிம்ம ராசி​யில் இருந்து கடக ராசிக்​கும் பெயர்ச்சி அடைந்​தனர்.

இதை​யொட்டி, தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயி​லில் தனி சந்​நி​தி​யில் அருள்​பாலிக்​கும் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடை​பெற்​றது. தொடர்ந்து, தங்​கக் கவசம் அணி​விக்​கப்​பட்டு மகா தீபாராதனை காட்​டப்​பட்​டது. இதில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று தரிசனம் செய்​தனர்.

மாலை 6 மணிக்கு ராகு பகவான் வெள்ளி சேஷ வாக​னத்​தில் வீதி​யுலா புறப்​பட்​டார். ராகு பெயர்ச்​சியை முன்​னிட்டு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்​பம் ஆகிய ராசிக்​காரர்​கள் பரி​காரம் செய்து​கொள்​ளலாம் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. நவ.16-ம் தேதி சந்​தனக் காப்பு அலங்​காரம், லட்​சார்ச்​சனை பூர்த்தி மற்​றும் மகா தீபாராதனை நடை​பெற உள்​ளது.

இதேபோல, மயி​லாடு​துறை மாவட்​டம் கீழப்​பெரும்​பள்​ளம் கிராமத்​தில் உள்ள சவுந்​தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் நவக்​கிரகத் தலங்​களில் கேது பரி​காரத் தலமாக விளங்​கு​கிறது. இங்கு தனிச் சந்​நி​தி​யில் அருள்​பாலிக்​கும் கேது பகவானுக்கு பெயர்ச்​சியை முன்​னிட்டு, மாலை 5.14 மணிக்கு மகா தீபாராதனை நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு தரிசனம் செய்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT