ஆன்மிகம்

சபரிமலையில் தரிசன அனுமதி இன்றுடன் நிறைவு

பந்தள ராஜ வம்ச வழிபாட்டுக்குப் பின் நாளை நடை அடைப்பு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை​யில் மகரஜோதி விழா நிறைவை சிறப்​பிக்​கும் வழி​பா​டாக பாரம்​பரிய, ஐதீக சம்​பிர​தாய சடங்​கு​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இன்​றுடன் பக்​தர்​களுக்​கான தரிசன அனு​மதி முடிவடைகிறது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பிரசித்தி பெற்ற மகரஜோதி திரு​விழா கடந்த 14-ம் தேதி நடை​பெற்​றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவைச் சிறப்​பிக்​கும் வகை​யில் பல்​வேறு பாரம்​பரிய, புராதன வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. முதற்​கட்​ட​மாக மகர ஜோதி விழா முடிந்த இரண்​டாம் நாளில் இருந்து தின​மும் படிபூஜை நடை​பெற்று வரு​கிறது. 4-ம்​நாள் படிபூஜை இன்று மாலை​யுடன் நிறைவு பெறுகிறது.

மகரஜோதி காலத்​தில் மட்​டுமே திறக்​கப்​படும் ஐயப்​பன் மணிமண்டப ஜீவச​மா​தி​யில் ஐயப்​பனின் எழுந்​தருளல் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. களம் எழுதுதல் என்று கூறப்​படும் இந்​நிகழ்ச்​சி​யில் மகாச​மாதி முன்பு ஐயப்​பனின் பால்​ய​காலம் முதல் யோகநிலை வரையி​லான பல்​வேறு உரு​வங்​கள் வரையப்​பட்டு வழி​பாடு​கள் நடை​பெறுகின்​றன.

சாங்​கிய வழி​பா​டாகக் கருதப்​படும் ஐயப்​பன் வேட்​டைக்​குச் செல்​லும் நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. இதற்​காக மாளி​கைபுரத்​தம்​மன் கோயில் அருகே இருந்து வேட்டை ஐயப்​பனின் ஊர்​வலம் தொடங்​கியது. 18-ம்​படி முன்பு வாள், வில்​லுடன் ஐயப்​பனின் வீர, தீர பராக்​கிரமங்​கள் கிராமிய முழக்​கங்​களாக எழுப்​பப்​பட்​டன. இதனைப் பாரம்​பரிய குழு​வினர் முன்​மொழிந்து ஆமோ​தித்​தனர். அரைமணி நேரம் நடை​பெற்ற இந்த வழி​பாட்​டில் பந்​தளம் ராஜ வம்ச பிர​தி​நிதி உட்பட பலரும் கலந்து கொண்​டனர்.

அதே​போல் மகரஜோதி கால நெய்​அபிஷேகம் நேற்று காலை 11 மணி​யுடன் முடிந்​தது. பாரம்​பரிய ஐதீகத்​தின் ஒரு பகு​தி​யாக இன்று இரவு குருதி பூஜை மாளி​கைபுரத்​தம்​மன் கோயில் அருகே நடை​பெற உள்​ளது. உணவு மற்​றும் நீரில் குங்​குமம் கரைக்​கப்​பட்டு அவை வன தேவதைகளுக்கு வழங்​கப்பட உள்​ளன. இத்​துடன் அனைத்து பாரம்​பரிய சடங்​கு​களும் நிறைவு பெறுகின்​றன.

இதைத் தொடர்ந்து இன்று இரவு 11 மணி வரையே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனு​ம​திக்​கப்​படு​வர். நாளை காலை பந்தள ராஜ வம்ச பிர​தி​நி​தி​யின் சிறப்பு வழி​பாட்​டுக்​குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடை​சாத்​தப்பட உள்​ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழி​பாடு​கள் அனைத்​தும் நிறைவு பெறுகின்​றன. பின்​பு, கும்​பம் மாத (மாசி) வழி​பாட்​டுக்​காக பிப்​.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​படும்.

SCROLL FOR NEXT