ஆன்மிகம்

பழநியில் மார்ச் 26-ல் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

செய்திப்பிரிவு

பழநி: ​பழநி திரு ஆவினன்​குடி​யில் பங்​குனி உத்​திரத் திரு​விழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

விழா​வின் 10 நாட்​களும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிப்​பார்.

          

ஆறாம் நாளான 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்​கல்​யாண​மும், இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக் கோலத்​தில் வெள்​ளித் தேரோட்​ட​மும் நடை​பெற உள்​ளது.

ஏப்.1-ம் தேதி முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நடை​பெறுகிறது. ஏப்​.4-ம் தேதி காலை 9 மணிக்கு திரு​வூடல் நிகழ்ச்​சி​யும், இரவு 9 மணிக்கு மேல் கொடி​யிறக்​குதலுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT