பழநி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் வின்ச் ரயில்.

 
ஆன்மிகம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு ‘வின்ச்’ ரயிலில் செல்ல ஆன்லைன் முன்பதிவு சேவை தொடக்கம்

செய்திப்பிரிவு

பழநி: பழநி முரு​கன் கோயிலுக்கு வின்ச் ரயி​லில் செல்ல ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​யும் வசதி நேற்று முதல் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி மலைக்​கோ​யிலுக்கு பக்​தர்​கள் எளி​தில் வந்து செல்​லும் வகை​யில் ரோப் கார் (கம்பி வட ஊர்​தி) மற்​றும் மின் இழுவை ரயில்​கள் (வின்ச்) இயக்​கப்​படு​கின்​றன. ரோப் காரில் 3 நிமிடங்​களி​லும், இழுவை ரயி​லில் 7 நிமிடங்​களி​லும் மலைக்​கோ​யிலை அடைய​லாம். இவற்​றில் சாதாரண நாட்​களில் 2 மணி நேர​மும், விடு​முறை நாட்​கள் மற்​றும் திரு​விழா காலங்​களில் குறைந்​தது 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் பக்தர்கள் வரிசை​யில் காத்​திருந்து செல்​லும் நிலை உள்​ளது.

திருச்​செந்​தூர், திரு​வண்​ணா​மலை, பழநி உள்​ளிட்ட முக்​கிய கோயில்​களில் இடைத்​தரகர்​களின் நடமாட்​டத்தை தடுக்​க​வும், கூட்ட நெரிசலை முறைப்​படுத்​த​வும் ஆன்​லைன் டிக்​கெட் முன்​ப​திவு மற்​றும் நேர ஒதுக்​கீட்டு முறையை விரை​வில் அறி​முகம் செய்ய அறநிலை​யத்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, ஜூலை 3-ம் தேதி முதல் பழநி​யில் 6 கால பூஜைக்​கும் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​யும் வசதியும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதனை தொடர்ந்​து, நேற்று முதல் வின்ச் ரயி​லில் முன்​ப​திவு செய்து பயணிக்​கும் வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது.

தின​மும் பிற்​பகல் 1.31, 2.01, 2.31 மற்​றும் 3.01 மணி என 4 பிரிவு​களாக நேரம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. பக்​தர்​கள் தங்​களுக்கு விருப்​ப​மான நாள் மற்​றும் நேரத்தை தேர்வு செய்​து, நபர் ஒன்​றுக்கு ரூ.100 செலுத்தி முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

இந்த கட்​ட​ணம் அடி​வாரத்​தில் இருந்து மலைக்​கோ​யிலுக்​கும், மலைக்​கோயி​லில் இருந்து அடி​வாரத்​துக்​குத் திரும்பி வருவதற்​கான இரு​வழி கட்​ட​ண​மாகும். குறிப்​பிட்ட நேர ஒதுக்​கீட்​டில் 25 நபர்​கள் வரை மட்​டுமே முன்​ப​திவு செய்ய முடி​யும். முன்​ப​திவு செய்த பக்​தர்​கள் வரிசை​யில் காத்​திருக்​காமல் நேரடி​யாக வின்ச் ரயில் நிலை​யம் நுழைவு வாயில் வழி​யாக உள்ளே செல்​லலாம்.

இந்த சேவை தைப்​பூசம், பங்​குனி உத்​திரத் திரு​விழா, கிருத்​தி​கை, தமிழ்ப் புத்​தாண்டு உள்​ளிட்ட முக்​கிய விசேஷ நாட்​களில் மட்​டும் இருக்​காது. அதன்​படி ஆண்​டுக்கு 44 நாட்​கள் முன்​ப​திவு வசதி இருக்​காது. இதே​போல், ரோப் காரில் செல்​வதற்​கும் கோயிலுக்​குச் சொந்​த​மான விடுதி அறை​களில் தங்​கு​வதற்​கும் முன்​ப​திவு செய்​யும் வசதி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​படும் என்று தேவஸ்​தான அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT