ஆன்மிகம்

மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடைதிறப்பு

செய்திப்பிரிவு

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மாதாந்​திர வழிபாட்டுக்காக இன்று மாலை கோயில் நடை திறக்​கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தில் நடை​ திறக்​கப்​பட்டு 5 நாட்​கள் வழி​பாடு​கள் நடை​பெறு​வது வழக்​கம். இதன்​படி இடவம் (வை​காசி) மாதத்​துக்​காக இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.

தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு முன்​னிலை​யில் மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி கோயில் கரு​வறையை திறந்து வைக்க உள்​ளார். தொடர்ந்து ஐயப்​பனின் தவக்​கோலம் நீக்​கப்​பட்டு விக்​ரகம் மீது பூசப்​பட்ட விபூதி பக்​தர்​களுக்கு பிரசாத​மாக வழங்​கப்​படும். பின்பு சிறப்பு வழி​பாடு​கள் எது​வுமின்றி இரவு நடை சாத்​தப்படும்.

பின்பு நாளை அதி​காலை முதல் கணபதி ஹோமம் உள்​ளிட்ட பல்​வேறு சிறப்பு வழி​பாடு​கள் 19-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறும்போது, ‘‘15-ம் தேதி முதல் தென்​மேற்கு பரு​வ மழை தொடங்​கு​வதற்​கான அறிகுறிகள் உள்​ளன. அந்​​தமான் நிக்​கோபர் தீவு​களில் தொடங்கி கேரளா முழு​வதும் மழை நீடிக்​கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரி​வித்​துள்​ளது. எனவே பக்​தர்​கள் குடை போன்ற பாது​காப்பு ஏற்​பாடு​களு​டன் கோயிலுக்கு வர வேண்​டும்’’ என்​றனர்.

SCROLL FOR NEXT