மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்.

 
ஆன்மிகம்

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தள்ளிப்போகாது: அமைச்சர் ரமேஷ் உறுதி

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேக விழா தள்​ளிப்​போ​காது, குறித்த தேதி​யில் நடத்த திட்​ட​மிட்​டுள்​ளோம் என இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் நேற்று தெரி​வித்​தார்.

உலகப்​பு​கழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் கும்​பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்​ரல் 8-ம் தேதி நடந்​தது. 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்​டும் என்​பது ஆகம விதி. அதன்​படி 2021-ம் ஆண்டு கும்​பாபிஷேகம் நடத்த ஏற்​பாடு​கள் நடந்​தன. இதற்​கிடை​யில் 2018 பிப். 2-ம் தேதி வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​தில் தீ விபத்து ஏற்​பட்டு சேதமடைந்​த​தால் குறித்த காலத்​துக்​குள் கும்​பாபிஷேகம் நடத்​த​வில்​லை. தற்​போது வீர​வசந்​த​ராயர் மண்​டபப் பணி​களோடு கும்​பாபிஷேக திருப்​பணி​களும் நடந்து வரு​கின்​றன.

கடந்த திமுக ஆட்​சி​யின்​போது வரும் செப். 17-ம் தேதிகாலை 7.45 முதல் 8.10 மணிக்​குள் கும்​பாபிஷேகம் நடத்த முடிவு எடுக்​கப்​பட்​டது. தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட நிலை​யில் தவெக தலை​வர் விஜய் தலை​மை​யில் புதிய அரசு அமைந்​துள்​ளது. இதனால் கடந்த திமுக ஆட்​சி​யில் குறித்த தேதி​யில் கும்​பாபிஷேகம் நடத்​தப்​படு​மா, மாற்​றுத்​தே​தி​யில் நடத்​தப்​படுமா என்ற சந்​தேகம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் கோயி​லில் நடந்து வரும் கும்​பாபிஷேகத் திருப்​பணி​கள், வீர​வசந்​த​ராயர் மண்​டபப் பணி​களை நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது இணை ஆணை​யர் மாரியப்​பன், கோயில் இணை ஆணை​யர் நா.சுரேஷ், உதவி ஆணை​யர் முத்​து​ராமன் ஆகியோர் உடனிருந்​தனர்.

அதன்​பின்​னர் அமைச்​சர் ரமேஷ் கூறுகை​யில், மீனாட்சி அம்மன் கோயி​லில் கும்​பாபிஷேகப் பணி​கள் நடந்து வரு​கின்​றன. திட்​ட​மிட்ட தேதி​யில், திட்​ட​மிட்ட நேரத்​தில் கும்​பாபிஷேகம் நடத்த வேண்​டும் என்​ப​தற்​காக ஆய்வு செய்ய வந்​துள்​ளேன். வீர​வசந்​த​ராயர் மண்டப கட்​டு​மானப் பணி​களை பார்த்​தேன். கும்​பாபிஷேகப் பணி​களில் 90 சதவீதம் நிறைவடைந்​துள்​ளன, மீத​முள்ள 10 சதவீத பணி​களை விரைந்து முடிக்க உள்​ளோம்.

கும்​பாபிஷேக விழா தள்​ளிப்​ போ​காது. குறித்த தேதி​யில் நடத்த திட்​ட​மிட்​டுள்​ளோம். அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி கும்​பாபிஷேக விழா தேதி அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் என்​றார்.

SCROLL FOR NEXT