மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் அம்மனின் உற்சவத்தை காண திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) விஸ்வரூப அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளம்மன்.

 
ஆன்மிகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை

விளை பொருட்கள், உணவு தானியங்களை வீசி வழிபாடு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: ​விழுப்​புரம் மாவட்​டம் மேல்​மலை​யனூரில் பிரசித்தி பெற்ற அங்​காளம்​மன் கோயில் மயான கொள்ளை திரு​விழா வெகு விமரிசை​யாக நேற்று நடந்​தது. மேல்மலையனூர் அங்​காளம்​மன் கோயி​லில் மாசி பெரு​விழா, மகா சிவ​ராத்​திரி நாளான நேற்று முன்தினம் இரவு கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. பின்​னர் சக்தி கரக வழி​பாடு நடை​பெற்​றது.

இதையடுத்​து, 2-ம் நாளான நேற்று காலை கோயில் நடை திறக்​கப்​பட்​டு, மூல​வர் மற்​றும் உற்​சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை​பெற்​றது. அதன்​பிறகு மயான கொள்ளை திரு​விழா நடை​பெற்​றது. சிம்ம வாக​னத்​தில் விஸ்​வரூப அலங்​காரத்​தில் மயானத்​துக்கு அங்​காளம்​மன் புறப்​பட்​டார்.

          

வழியெங்​கும் அங்​காளம்​மன் முன்பு பல்​வேறு வேட​மிட்ட பக்​தர்​கள் நடன​மாடியபடி சென்​றனர். மயானத்தை அங்​காளம்​மன் சென்​றடைந்​தும், அங்கு அவருக்கு சிறப்பு வழி​பாட்​டுடன் பிரம்ம கபாலத்தை அங்​காளம்​மன் ஆட்​கொள்​ளும் நிகழ்வு நடை​பெற்​றது.

சிவனுக்கு பிடித்​திருந்த பிரம்​மஹத்தி தோஷத்தை அங்​காளம்​மன் நீக்​கிய​தாக புராணங்​கள் கூறுகிறது. செல்​லும் வழி​யிலும் மற்​றும் மயானத்​தி​லும் அங்​காளம்​மன் மீது நாண​யங்​கள், விளை பொருட்​கள், உணவு தானி​யங்​கள் மற்​றும் சேவல்​களை பக்​தர்​கள் காணிக்கை செலுத்​தினர்.

இதையடுத்து மயானத்​தில் படைக்​கப்​பட்ட பொருட்​களை பக்​தர்​கள் மீது பூசா​ரி​கள் சூறை விட்​டனர். அவற்​றைப் போட்டி போட்​டிக் கொண்டு பக்​தர்​கள் சேகரித்​தனர். மயான கொள்​ளை​யில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரளாக கலந்து கொண்டு அங்​காளம்​மனை வழிபட்​டனர்.

இதைத்​தொடர்ந்து 5-ம் நாளான வரும் 19-ம் தேதி மாலை 3 மணி​யள​வில் தீமிதி உற்​சவ​மும், முக்​கிய நிகழ்​வான வரும் 21-ம் தேதி திருத்​தேர் உற்​சவமும் நடை​பெற உள்​ளது.

10 நாள் நடை​பெறும் மாசி திரு​விழா​வில், தினசரி காலை மற்​றும் இரவில் பல்​வேறு வாக​னங்​களில் அங்​காளம்​மன் உற்​சவம் நடை​பெற்று வரு​கிறது. வரும் 27-ம் தேதி அம்​மன் வீதி​யுலா மற்​றும் காப்பு களைதல் உற்​சவத்​துடன் மாசி திரு​விழா நிறைவு பெற உள்​ளது.

மயான கொள்ளை விழா ஏற்​பாடு​களை இந்து சமய அறநிலை​யத் துறை​யினர் மற்​றும் அறங்​காவலர் குழு​வினர் செய்​திருந்​தனர். சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன. போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

SCROLL FOR NEXT