கோப்புப் படம்

 
ஆன்மிகம்

12 கோயில்களில் பிப்.15-ல் மகா சிவராத்திரி பெருவிழா: தமிழக அறநிலையத் துறை ஏற்பாடு

துரை விஜயராஜ்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 12 கோயில்கள் சார்பில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழாவை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் பிப்.15-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஆண்டு 9 கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பேரூர் பட்டீசுவரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் ஆகிய 9 கோயில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

          

இந்நிலையில், 2025-2026-ம் ஆண்டு சட்டப்பேரவை அறிவிப்பின்படி, ‘இந்த ஆண்டு கூடுதலாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களுடன் ஏற்கெனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோயில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோயில்கள் சார்பில் பிப்.15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT