ஆன்மிகம்

உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்ட திட்டம்: 3 விதிகளை பரிசீலிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்க ஆண்​டு​தோறும் பக்​தர்​களின் கூட்​டம் அதி​கரித்​துக்​கொண்டே வரு​கிறது. இதனால் உண்​டியல் ஆதாய​மும் ஆண்​டுக்கு ரூ.1,500 கோடியை தாண்​டி​யுள்​ளது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் கோயில்​கள் மட்​டுமின்​றி, சனாதன தர்​மத்​தை​யும் நிலை​நாட்ட பல வழிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இது தவிர பிராண தானம், அன்​ன​தானம், கல்வி தானம் என பல வழிகளில் பக்​தர்​களுக்கு பக்க பலமாக இருந்து வரு​கிறது.

தர்ம பிரச்​சார பரிஷத் மூலம் இந்து மத தர்​மத்தை உலகெங்​கிலும் கடைப் பிடிக்க தற்​போது தயா​ராகி வரு​கிறது. இனி உலகெமெங்​கிலும் ஏழு​மலை​யான் கோயில்​கள் கட்​டப்பட உள்​ளது. இது​வரை காஷ்மீர் முதல் கன்​னி​யாகுமரி வரை என்​றிருந்த நோக்​கம், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் ஆலோ​சனை​யின் பேரில், உலக நாடு​கள் முழு​வதும் ஏழு​மலை​யானின் கோயில்​களை உரு​வாக்க திட்​டம் தயா​ராகி வரு​கிறது.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஒரு ’குளோபல் பிராண்ட்’ ஆக உரு​வாக உள்​ளது. இதன் மூலம் ஏழு​மலை​யானின் சொத்​து​களை அதி​கரிக்​க​வும், உண்​டியல் வரு​மானத்தை கூட்​ட​வும் செய்​ய​லாம் எனவும் கூறப்​படு​கிறது.

ஆஸ்​திரேலி​யா, இலங்​கை, நெதர்​லாந்​து, ஸ்வீடன், ஸ்விட்​சர்​லாந்​து, போலந்​து, அயர்​லாந்​து, நியூசிலாந்து உள்​ளிட்ட நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களிட​மிருந்து திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு கோயில் கட்ட விண்​ணப்​பங்​கள் வந்​துள்​ளன. இவை​களை தேவஸ்​தானத்​தினர் பரிசீலித்து வரு​கின்​றனர்.

ஒரு நிபுணர் குழுவை நியமனம் செய்​து, மேற்​கண்ட நாடு​களுக்கு அனுப்​பி, அங்கு கோயில் கட்​டு​வது தொடர்​பான நிபந்​தனை​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்து சமய அறநிலைய துறை, ரிசர்வ் வங்​கி, பெரா, பெமா போன்​றவற்​றின் அனு​ம​தி​களை முதலில் பெற வேண்​டி​யுள்​ளது. இந்த அனு​ம​தி​கள் கிடைத்​ததும், கோயில் கட்​டு​மான பணி​களை திருப்​பதி தேவஸ்​தானம் தொடங்​கும்.

அதற்கு முன்​பாக 3 விதி​முறை​களை பரிசீலிக்கிறது. அதன்​படி, கோயில் இடத்தை யாராவது அல்​லது அரசு தான​மாக கொடுத்​தால், அந்த இடத்​தில் திருப்​பதி தேவஸ்​தானமே சொந்​த​மாக கோயில் கட்​டு​வது.

இரண்​டாவ​தாக, ஒரு​வேளை திருப்​பதி தேவஸ்​தானம் சொந்​த​மாக கோயில் கட்ட வேண்​டாம் என தீர்​மானித்​தால், அந்​தந்த நாடு​களில் உள்ள இந்து மத அமைப்​பினர் சார்​பில் கட்​டப்​படும் கோயிலுக்கு திருப்​பதி தேவஸ்​தானம் சிலைகளை வழங்​கி, ஆகம விதி​முறை​களை பின்​பற்ற தேவஸ்​தானம் சார்​பில் அர்ச்​சகர்​களை நியமனம் செய்​வது என தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது.

மூன்​றாவது, தனி​யார் மற்​றும் திருப்​பதி தேவஸ்​தானம் இணைந்து கோயிலை கட்​டி, பராமரிப்​பது. ஆனால், முதலில் கூறியது​போல் செய்​தால்​தான் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் வரு​வாய் பெரு​கும் என கூறப்​படு​கிறது. அப்​போது தான் முழு​வது​மாக ஆகம வி​தி​களை கடைபிடிக்​க இயலும்​ எனவும்​ ஆகம வல்​லுனர்​களால்​ அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT