தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு கடவுளர் வேடமணிந்த பக்தர்கள் வலம் வருகின்றனர். படம்: என்.ராஜேஷ்

 
ஆன்மிகம்

தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம்: குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் தசரா குடில் அமைத்து வீதிதோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கின்றனர்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நாளை (அக்.20) நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி நாளை இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

தொடர்ந்து, 21-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT