மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுழுக்கு தீர்த்தவாரியில், போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள். உள்படம்: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுழுக்கு தீர்த்தவாரியையொட்டி, காவிரி தெற்கு கரையில் பாதாம், முந்திரி, கிராம்பு, ஏலக்காய், திராட்சையால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அபயாம்பிகை சமேத மாயூரநாதர்.

 
ஆன்மிகம்

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி: காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடைமுழுக்கு தீர்த்​தவாரி​யில் பல்​லாயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். காவி​ரி​யில் தண்​ணீர் இல்​லாததால், போர்​வெல் நீரில் பக்​தர்​கள் புனித நீராடினர்.

பக்​தர்​கள் புனித நீராடிய​தால் ஏற்​பட்ட பாவச்​சுமையின் காரண​மாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்​ளிட்ட ஜீவநதி​கள், மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்​கள் பாவங்​களை போக்​கிக் கொண்​ட​தாக புராணங்​களில் கூறப்​படு​கிறது. அத​னால், இத்​தலம் காசிக்கு நிக​ராக கருதப்​படு​கிறது.

இந்​நிலை​யில், ஆண்​டுதோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் மயி​லாடு​துறை துலாக்​கட்ட காவி​ரி​யில் நடத்​தப்​படும் துலா உற்​சவம் நிகழாண்டு அக்.18-ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்​தவாரியுடன் தொடங்​கியது. இதில், முக்​கிய திரு​விழாவாக கடைமுழுக்கு தீர்த்​தவாரி உற்​சவம் நேற்று நடை​பெற்​றது.

இதை​யொட்டி, அபயாம்​பிகை சமேத மாயூரநாதர், அறம்​வளர்த்​தநாயகி சமேத ஐயாறப்​பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்​சமூர்த்​தி​களு​டன் காவி​ரி​யின் தெற்கு கரையிலும், ஞானாம்​பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி​விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவி​ரி​யின் வடக்கு கரையிலும் எழுந்​தருளினர்.

திரு​வாவடு​துறை ஆதீனம் 24-வது குரு​மகா சந்​நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்​பல​வாண தேசிக பர​மாச்​சா​ரிய சுவாமிகள் முன்​னிலை​யில் தெற்கு கரையிலும், தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பர​மாச்​சா​ரிய சுவாமிகள் முன்​னிலை​யில் வடக்கு கரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்​யப்​பட்டு தீர்த்​தவாரி நடை​பெற்​றது.

தொடர்ந்து, காவி​ரி​யில் தண்​ணீர் இல்​லாததால் 2 ஆதீனகர்த்​தர்​கள் உட்​பட ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் போர்​வெல் நீரில் புனிதநீராடினர். பின்​னர், 2 கரைகளி​லும் சுவாமி, அம்​பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்​டப்​பட்​டது.

தொடர்ந்து, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர் செய்​தி​யாளர்​களிடம் கூறியபோது, ‘‘ஆண்​டுதோறும் நடை​பெறும் பிரசித்​திபெற்ற கடைமுழுக்கு தீர்த்​தவாரி​யின்​போது காவி​ரி​யில் பக்​தர்​கள் புனிதநீராட தண்​ணீர் கிடைப்​ப​தற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்​டும். காவி​ரி​யில் கழிவுநீர் கலப்​ப​தும், புனித நீராட தண்​ணீர் இல்​லாததும் மனவருத்​தத்தை அளிக்​கிறது” என்​றார்.

நீதி​மன்ற அவதி​மதிப்பு வழக்கு: மயி​லாடு​துறையைச் சேர்ந்த வழக்​கறிஞரும், பாஜக மாநில செயற்​குழு உறுப்​பினரு​மான கே.ராஜேந்​திரன் கடைமுழுக்கு தீர்த்​தவாரிக்கு காவி​ரி​யில் தண்​ணீர் திறந்​து​விடக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த பொதுநல வழக்கு நவ.13-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​ போது, “ஏற்​கெனவே காவி​ரி​யில் தண்​ணீர் திறந்​து​விடப்​பட்​டுள்​ளது. கடைமுழுக்கு தீர்த்​தவாரிக்கு நவ.16-ம் தேதிக்​குள் காவிரி தண்​ணீர் துலாக்​கட்​டத்தை சென்​றடையும்” என அரசுத் தரப்பு வழக்​கறிஞர்​கள் உறுதி​யளித்​ததால், நீதிப​தி​கள் வழக்கை முடித்​து​ வைத்​தனர்.

ஆனால், கல்​லணை​யில் இருந்து 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படாததால், நீதி​மன்​றத்​தில் அரசு தரப்பு உறுதி​யளித்​த​படி மயி​லாடு​துறை பகுதிக்கு காவிரி நீர் நேற்று மாலை வரை வர​வில்லை. இத​னால், பல்​லாயிரக்​கணக்​கான பக்​தர்​கள் போர்​வெல் நீரில் புனித நீராடி ஏமாற்​றத்​துடன் சென்​றனர். இத​னால், அரசு அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தொடரப் போவ​தாக வழக்​கறிஞர் கே.ராஜேந்​திரன் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT