திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் நேற்று ஏற்றப்பட்ட மகா தீபம்.

 
ஆன்மிகம்

கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்: சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: கார்த்திகை தீபத் திரு​விழா சென்​னை​யில் நேற்று கோலாகலமாக கொண்​டாடப்​பட்​டது. இதை​யொட்டி, சிவாலயங்​களில் சொக்​கப்​பனை ஏற்றி பக்​தர்​கள் வழிபாடு நடத்​தினர்.

சிவபெரு​மான் ஜோதி வடி​வில் தோன்றி, அடிமுடி காண முடி​யாத பேரொளியாகக் காட்​சி​யளித்ததை நினைவு​கூரும் வகை​யில் ஆண்​டுதோறும் கார்த்​திகை தீபத் திரு​விழா கொண்​டாடப்​படு​கிறது.

அந்​தவகை​யில், தமிழர்​களின் பாரம்​பரிய ஆன்​மிகத் விழாவான கார்த்​திகை தீபத் திரு​விழா, சென்னை மாநகரின் பல்​வேறு கோயில்​களில் நேற்று விமரிசையாகக் கொண்​டாடப்​பட்​டது.

இதை​யொட்டி, சிவாலயங்​களில் சிறப்பு அபிஷேகங்​கள், அலங்​காரங்​கள், தீபாராதனைகள் மற்​றும் சொக்​கப்​பனை ஏற்​றும் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் அதி​காலை முதலே ஏராளமான பக்​தர்​கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

விழாவையொட்டி, சுவாமி மற்​றும் அம்​பாளுக்கு சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டது. மாலை 6 மணி முதல் நவ​ராத்​திரி மண்​டபத்​தில் சுவாமி, அம்​பாள் திரு​வுரு​வங்​கள் தரிசனத்​துக்​கு வைக்​கப்பட்டன.

தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல் சுவாமி வீதி​யுலா சன்​னதி தெரு வழி​யாக நடை​பெற்றது. அண்​ணா​மலை சன்​னதி மண்​டபத்​தின் மீது மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. இதனைத் தொடர்ந்து, இரவு 8 மணி​யளவில் கோயிலுக்கு வெளியே பாரம்​பரிய முறைப்​படி சொக்​கப்​பனை ஏற்​றும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று பக்தி முழக்​கத்​துடன் தீபத்தை வழிபட்​டனர். இதேபோல், திரு​வான்​மியூர் மருந்​தீஸ்வரர் கோயி​லிலும் கார்த்​திகை தீபத் திரு​விழா கொண்​டாடப்​பட்​டது. மாலை 6 மணி​யளவில் கோயில் கார் நிறுத்​தும் பகுதி​யில் சொக்​கப்​பனை ஏற்​றப்​பட்​டது. இதையடுத்து, நடராஜர் வீதி​யுலா நடை​பெற்​றது.

இதில் ஏராளமான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். வியாசர்​பாடி ரவீஸ்வரர் கோயி​லில் சுவாமி சிறப்பு அலங்​காரத்​தில் வீதி​யுலா நடை​பெற்றது. தொடர்ந்து, சொக்​கப்​பனை ஏற்​றும் நிகழ்ச்​சி நடந்தது.

சைதாப்​பேட்டை காரணீஸ்வரர் கோயில், மாடம்​பாக்​கம் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்​ளிட்ட சென்​னை​யின் பல்​வேறு சிவாலயங்​களி​லும் கார்த்​திகை தீபத் திரு​விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடை​பெற்​றன.

சிவாலயங்​கள் மட்​டுமின்றி, வடபழனி முருகன் கோயில், கந்​த கோட்​டம் முத்​துக்​குமாரசுவாமி கோயில் உள்​ளிட்ட கோயில்​களி​லும் சிறப்பு அலங்​காரம், தீப வழிபாடு, பூஜைகள் நடை​பெற்​றன.

இந்த விழாக்​களில் குடும்​பம் குடும்​பமாகப் பக்​தர்​கள் பங்​கேற்று கோயில்​களி​லும் வீடுகளி​லும் அகல் விளக்​கு​களை ஏற்றி வழிபட்​டனர். இத​னால், கோயில்​கள் அனைத்​தும் தீப ஒளியில் ஜொலித்தன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT