சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக கருட சேவை நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்

 
ஆன்மிகம்

சித்திரை பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை உற்சவம்

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்சவ விழாவையொட்​டி, கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

சென்னை, திரு​வல்​லிக்​கேணி​யில் அமைந்​துள்ள பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில், இந்த ஆண்​டுக்​கான சித்​திரை பிரம்​மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது.

தொடர்ந்​து, புன்​னைமர வாக​னம், சேஷ வாக​னம், சிம்ம வாக​னத்​தில் சுவாமி வீதி உலா வந்​தார். விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான கருட சேவை நேற்று மிகச்​ சிறப்​பாக நடை​பெற்​றது.

அதி​காலை 5 மணி அளவில், கம்​பீர​மான கருட வாக​னத்​தில் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் எழுந்​தருளி​னார். சிங்​க​ராச்​சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்​கரை தெரு மற்​றும் தெற்கு மாட வீதி​கள் வழி​யாக சுவாமி வீதி உலா வந்​த​போது, ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கோ​விந்​தா.. கோவிந்​தா..’ என முழக்​கமிட்டு சுவாமியை தரிசித்​தனர்.

தொடர்ந்​து, பகல் 12 மணி அளவில் ஏகாந்த சேவை​யும், இரவு அம்ச வாக​னத்​தில் சுவாமி வீதி உலா​வும் நடை​பெற்​றது. பிரம்​மோற்​சவத்​தின் தொடர்ச்​சி​யாக, இன்று காலை சூரிய பிரபை வாக​னத்​தி​லும், இரவு சந்​திர பிரபை வாக​னத்​தி​லும் சுவாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளிக்க உள்​ளார்.

நாளை (மே 5) நாச்​சி​யார் திருக்​கோலம் உற்​சவம் நடை​பெற உள்​ளது. பிரம்​மோற்சவ விழா​வின் மிக முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் வரும் 7-ம் தேதி காலை 7 மணிக்கு நடை​பெற உள்​ளது.

அலங்​கரிக்​கப்​பட்ட பிரம்​மாண்ட தேரில் பார்த்​த​சா​ரதி சுவாமி எழுந்​தருளி மாட வீதி​களில் வலம் வரவுள்​ளார். இதற்​காக தேரை தயார் செய்​யும் பணி​கள் மற்​றும் பாது​காப்பு ஏற்​பாடு​களை கோயில் நிர்​வாகத்​தினர்​ மிகத்​ தீவிர​மாக மேற்​கொண்​டு வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT