ஆன்மிகம்

திருப்பதி​யில் செப்.24 வரை சர்வ தரிசன டோக்கன் விநியோகம் ரத்து

செய்திப்பிரிவு

திருப்பதி: பிரம்​மோற்​சவத்தையொட்டி கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருப்பதி​யில் பூதேவி காம்ப்​ளக்​ஸ், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய 3 இடங்​களில் வழங்​கப்​பட்டு வந்த சர்வ தரிசன டோக்கன்​களை திருப்​பதி தேவஸ்​தானம் ரத்து செய்திருந்தது.​

முன்​னறி​விப்பு ஏதும் இன்றி ரத்து செய்​த​தால், பக்​தர்​கள் தரிசன டோக்​கன்​களுக்​காக அலை​யும் நிலை ஏற்​பட்​டது. இந்நிலையில், வரும் 24-ம் தேதி வரை சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​கப்பட மாட்​டாது என தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. எனினும் 25-ம் தேதி தரிசன்த்​திற்கு வரும் 24-ம் தேதி 3 இடங்​களில் டோக்​கன் விநியோகம் செய்​யப்​படுமென தேவஸ்​தான அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர்​.

SCROLL FOR NEXT