திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கடந்த டிச. 3-ம் தேதி நடைபெற்ற தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா முடிவடைந்த நிலையிலும் தற்போதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் தினமும் பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் வந்திருந்ததால், கட்டண தரிசன வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாகவும், பொது தரிசன வரிசையில் 7 மணி நேரத்துக்கு மேலாகவும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.