கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.| படம்: சி.எஸ்.ஆறுமுகம் |

 
ஆன்மிகம்

கும்பகோணம்: 12 ஆண்டுக்கு பிறகு அத்திவரதரை தரிசனம் செய்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் பாதாள அறை​யில் இருந்து 12 ஆண்​டு​களுக்கு பிறகு வெளியே எடுக்​கப்​பட்ட ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை ஏராள​மான பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் நின்று தரிசனம் செய்​தனர்.

கும்​பகோணம் பிரம்​மன் கோயில் தெரு​வில் உள்ள வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் மூல​வர் சந்​நி​திக்கு கிழக்​கில் உள்ள பாதாள அறை​யில் அத்தி மரத்​தாலான சுமார் ஒன்​றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதர் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது.

          

இந்தச் சிலையை 12 ஆண்​டு​களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பக்​தர்​களின் தரிசனத்​துக்கு வைக்​கப்​படு​வது வழக்​கம். அதன்​படி, 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்த சிலை நேற்று முன்​தினம் வெளியே எடுக்​கப்​பட்​டு பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது.

இதற்​காக நேற்று அதி​காலை 5 மணி முதல் பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை தரிசனம் செய்​தனர். இதில், தமிழகத்​தைச் சேர்ந்த பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்தும் கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கேரளம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த ஏராள​மான பக்​தர்​களும் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

வரும் 10-ம் தேதி வரை அத்​திவரதரை தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நாட்​களில் தின​மும் காலை 8 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை​யிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை​யிலும் தைலக் காப்​பு, புஷ்ப சேவை, ஊஞ்​சல் சேவை நடை​பெறும்.

கும்​பகோணம் மேற்கு காவல் ஆய்​வாளர் சிவக்​கு​மார் தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மற்​றும் ஊர்க்​காவல் படை​யினர் பாது​காப்பு பணி​யிலும், மாநக​ராட்சி ஆணை​யர் காந்​தி​ராஜ் தலை​மை​யில் 50-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் தூய்மை மற்​றும் சுகா​தார பணி​களி​லும் ஈடு​பட்​டுள்​ளனர். இதற்​கான ஏற்​பாடு​களை சவு​ராஷ்டிரா தர்​மபரி​பாலன கமிட்டி நிர்​வாகி​கள் செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT