ஆன்மிகம்

​வார விடுமுறை தினத்தையொட்டி பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

பழநி: வார விடு​முறையையொட்டி பழநி மலைக்​கோயி​லில் நேற்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் தமிழகம் மட்​டு மின்றிகேரளம் உள்​ளிட்ட வெளி​மாநிலங்​களில் இருந்​தும் ஏராள​மான பக்​தர்​கள் தின​மும் தரிசனத்​துக்குவரு​கின்​றனர்.

நேற்று வார விடுமுறையையொட்டி பழநி மலைக்​கோ​யிலில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். ரோப் கார்மற்​றும் வின்ச் ரயி​லில் மலைக்​கோ​யிலுக்​குச் செல்ல பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. 2 மணிநேரம் காத்​திருந்து பயணித்தனர்.

மலைக்​கோயி​லில் நேற்று அதி​காலை முதலே பொது மற்​றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் வரை காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். வரிசை​யில் காத்​திருந்த பக்​தர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் பிஸ்​கட், தண்​ணீர் பாட்​டில் வழங்​கப்​பட்​டன.

அன்​ன​தானம் வழங்​கும் இடத்​தி​லும் பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர். காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் கிரிவலம் வந்து மலைக்​கோயி​லில் பக்​தர்​கள் நேர்த்​திக்​கடனைச் செலுத்​தினர்.

பழநி அடி​வாரம், சந்​நிதி வீதி, பூங்கா சாலை, குளத்​துச் சாலை உள்​ளிட்ட முக்​கியச் சாலைகளில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

SCROLL FOR NEXT