துலா ஸ்நானத்தை முன்னிட்டு, திருப்பராய்த்துறை அகண்ட காவிரி ஆற்றில் நேற்று புனித நீராடிய பக்தர்கள். படம்: ர.செல்வமுத்துகுமார்

 
ஆன்மிகம்

ஐப்பசி மாத பிறப்பையொட்டி திருப்பராய்த்துறை, மயிலாடுதுறையில் துலா ஸ்நானம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்

செய்திப்பிரிவு

திருச்சி/ மயிலாடுதுறை: ஐப்​பசி மாத பிறப்​பையொட்டி திருப்​பராய்த்​துறை அகண்ட காவிரி, மயி​லாடு​துறை துலா கட்​டத்​தில் நேற்று துலா ஸ்நானம் நடை​பெற்​றது. இதில், அஸ்திரதேவருடன் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனிதநீராடினர்.

துலா மாத​மான ஐப்​பசி மாதத்​தில் காவிரி நதி​யில் நீராடுவதை துலா ஸ்நானம் என்​பர். ஐப்​பசி​யில் காவி​ரி​யில் நீராடினால் பாவங்​கள் தீரும், குடும்​பத்​துக்கு நன்​மை​கள் வந்து சேரும் என்​பது மக்​களின் நம்​பிக்கை.

இதில், ஐப்​பசி முதல் நாளில் திருச்சி மாவட்​டம் திருப்​பராய்த்​துறை​யில் அகண்ட காவி​ரி​யில் முதல் முழுக்கு நிகழ்​வும், ஐப்​பசி கடைசி நாளில் மயி​லாடு​துறை​யில் கடை முழுக்கு நிகழ்​வும் நடை​பெறும்.

அந்த வகை​யில், திருப்​பராய்த்​துறை காவிரி கரையில் உள்ள தாருகாவனேஸ்​வர் கோயி​லில் ஐப்​பசி முதல் நாளான நேற்று காலை மூலஸ்தான சிவலிங்​கத்​துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை​பெற்​றன. அதன்​பிறகு 2 வெள்ளி ரிஷப வாக​னங்​களில் சோமாஸ்​கந்​தர், அம்​மன் மற்​றும் பசும்​பொன் மயி​லாம்​பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் எழுந்​தருளி, திருக்​கைலாய வாத்​தி​யங்​கள் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​களு​டன் வீதி​யுலா​வாக அகண்ட காவி​ரியை வந்​தடைந்​தனர்.

இதைத் தொடர்ந்து, கோயி​லில் யாகசாலை​யில் வைத்து பூஜிக்​கப்​பட்ட புனிதநீர் கோயில் நிர்​வாகி​கள் மற்​றும் ஊர் முக்​கியஸ்​தர்​களால் காவிரி ஆற்​றில் ஊற்​றப்​பட்​டது. தொடர்ந்து, அஸ்திரதேவருக்கு விபூதி, மஞ்​சள், சந்​தனம், இளநீர், அரிசி மாவு, பால், பன்​னீர் உள்​ளிட்ட பொருட்​களால் அபிஷேகம் நடத்​தப்​பட்டு, பின்​னர் தீர்த்​தவாரி வைபவம் நடை​பெற்​றது. அப்​போது, அங்கு திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​களும் காவிரி ஆற்​றில் புனிதநீராடி, சுவாமி- அம்​மனை வழிபட்​டுச் சென்​றனர்.

மயிலாடுதுறையில்.. ஆண்​டுதோறும் ஐப்​பசி மாதம் முழு​வதும் மயி​லாடு​துறை துலாக் கட்ட காவி​ரி​யில் துலா உற்​சவம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் நிகழாண்டு நேற்று துலாக் கட்ட காவி​ரி​யில் தீர்த்​தவாரியுடன் துலா உற்​சவம் தொடங்​கியது.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியையொட்டி அஸ்திர தேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

இதை​யொட்டி, திரு​வாவடு​துறை ஆதீனத்​துக்கு சொந்​த​மான அபயாம்​பிகை சமேத மயூரநாதர், அறம்​வளர்த்த நாயகி சமேத ஐயாறப்​பர், தரு​மபுரம் ஆதீனத்​துக்​குச் சொந்​த​மான படித்​துறை விசாலாட்சி சமேத காசி​விஸ்வநாதர், தெப்​பக்​குள காசி​விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவி​ரி​யின் தென்​கரையிலும், தரு​மபுரம் ஆதீனத்​துக்கு சொந்​த​மான ஞானாம்​பிகை சமேத வதான்​யேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகியோர் பஞ்​சமூர்த்​தி​களு​டன் காவிரி வடக்கு கரையிலும் எழுந்​தருளினர்.

தொடர்ந்து, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்​யப்​பட்​டன. பின்​னர், துலா கட்ட காவி​ரி​யில் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

இதில், திரு​வாவடு​துறை ஆதீன கட்​டளை விசா​ரணை வேலப்ப தம்​பிரான் சுவாமிகள், தரு​மபுரம் ஆதீனம் கட்​டளை விசா​ரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்​பிரான் சுவாமிகள், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறு​வனர் சாமிநாத சிவாச்​சா​ரியார் உட்​பட திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர். தொடர்ந்து, நவ.7-ம் தேதி கொடியேற்​றம், நவ.8-ம் தேதி அமாவாசை தீர்த்​தவாரி, நவ.13-ம் தேதி திருக்​கல்​யாணம், நவ.15-ம் தேதி தேரோட்​டம், நவ.16-ம் தேதி கடைமுக தீர்த்​தவாரி ஆகியவை நடை​பெற உள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT