திருமலை: கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் கோடை விடுமுறை விரைவில் முடிவடைய உள்ளதால் வார நாட்களில் கூட பக்தர்களின் வருகை பன் மடங்கு உயர்ந்துள்ளது.
நேற்று வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு விற்பனை மையம், அன்னதான மையம் என எங்கு பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.