கோப்புப் படம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் சுப்ரபாத சேவையுடன் சுவாமியை துயில் எழச் செய்வார்கள். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவையை 30 நாட்கள் பாடி சுவாமியை துயில் எழச் செய்வது ஐதீகம்.
இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி மதியம் 1.23 மணிக்கு மார்கழி மாதம் பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி அதிகாலை முதல் திருப்பாவை பாடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜன.14-ம் தேதி வரை திருப்பாவை பாடி பெருமாளை துயில் எழச்செய்ய உள்ளனர். இதுதவிர மார்கழி முழுவதும் கிருஷ்ணருக்குத்தான் ஏகாந்த சேவை நடைபெறும்.