தஞ்​சாவூர்​ பெரிய கோயி​லில்​ நேற்​று நடை​பெற்​ற சித்​திரை பெருவிழா கொடியேற்றம்.

 
ஆன்மிகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்: ஏப்.27-ம் தேதி தேரோட்டம்

செய்திப்பிரிவு

தஞ்​சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயி​லில் சித்​திரை பெரு​விழா, கொடியேற்​றத்​துடன் நேற்று தொடங்​கியது. உலக பிரசித்​திப் பெற்ற தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் சதய விழா, ஆ‌ஷாட நவராத்​திரி விழா, சித்​திரைப் பெரு​விழா உட்பட பல்​வேறு விழாக்​கள் கொண்​டாடப்​பட்டு வரு​கின்​றன.

இதில் சித்​திரை பெரு​விழா 18 நாட்​கள் நடை​பெறும். இதன்​படி, நிகழாண்​டுக்​கான சித்​திரை பெரு​விழா பந்​தல்​கால் முகூர்த்​தம் மார்ச் 6-ம் தேதி நடை​பெற்று நேற்று கொடியேற்​றம் நடை​பெற்​றது.

          

முன்​ன​தாக, பஞ்​சமூர்த்​தி​களு​டன் உற்​சவர் சந்​திரசேகரர் கோயிலுக்​குள் புறப்​பா​டாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர், கொடிமரத்​துக்கு மஞ்​சள், சந்​தனம், பால், தயிர் உள்​ளிட்ட பல்​வேறு திர​வி​யங்​களால் சிறப்பு அபிஷேகங்​கள் செய்​யப்​பட்​டன.

இதையடுத்​து, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது. இதில் பக்​தர்​கள் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். இதைதொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணி​யள​வில் பஞ்​சமூர்த்​தி​கள் படிச்​சட்​டத்​தில் புறப்​பாடு நடை​பெற்​றது.

விழா நாட்​களில் தின​மும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. விழா நாட்​களில் நாள்​தோறும் பல்​லக்​கிலும், பல்​வேறு வாக​னங்​களி​லும் சுவாமி புறப்​பாடு நடை​பெறும்.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் ஏப்​.27-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்​குள் நடை​பெறுகிறது. அப்​போது நான்கு ராஜ வீதி​களி​லும் தேர் வலம் வரும். அன்று அதி​காலை 5 மணிக்​குள் முத்​து​மணி அலங்​கார சப்​பரத்​தில் பஞ்​சமூர்த்​தி​கள் புறப்​பாடு நடை​பெறுகிறது.

18-ம் நாளான ஏப்​.30-ம்​தேதி தியாக​ராஜர் ருத்​திர​பாத தரிசனத்​துடன் யதாஸ்​தான பிர​வேசம், அன்று பிற்​பகல் நடராஜர் 4 ராஜவீ​தி​கள் புறப்​பாடு, சிவகங்கை குளத்​தில் தீர்த்​த​வாரி ஆகியவை நடை​பெறும்.

தொடர்ந்​து, அன்று மாலை கொடி​யிறக்​கத்​துடன் சித்​திரை பெரு​விழா நிறைவடைகிறது. விழா ஏற்​பாடு​களை தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தானம் மற்​றும் அறநிலை​யத் துறை பணி​யாளர்​கள், உபய​தா​ரர்​களு​டன் இணைந்து செய்து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT