திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாலகமாக நடைபெற்றது. மலையை சுற்றி வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்

‘கந்தனுக்கு அரோகரா’ முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனித் திரு​விழா​வின் 13-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடை​பெற்​றது. ‘முரு​க​னுக்கு அரோக​ரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என ஆயிரக்கணக்​கான பக்​தர்​கள் முழக்​கத்​துடன் தேரைவடம் பிடித்து இழுத்தனர்.

முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான திருப்பரங்குன்றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பங்​குனி திரு​விழா கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

          

தின​மும் காலை மாலை​யில் சுவாமி, அம்​மன் பல்​வேறு வாக​னங்​களில் எழுந்​தருளினர். 11-ம் நாள் பட்​டாபிஷேகம், 12-ம் நாளான நேற்று முன்​தினம் சுப்​பிரமணிய சுவாமிக்​கும் தெய்​வானைக்​கும் திருக்​கல்​யாணம் நடை​பெற்​றது.

முக்​கிய விழா​வான தேரோட்​டத்​தையொட்டி அதி​காலை 5.45 மணி​யள​வில் உற்​சவர் சந்​நி​தியி​லிருந்து சுப்​பிரமணிய சுவாமி, தெய்​வானை சிறப்பு அலங்​காரத்​தில் கோயில் முன்​புள்ள தேரில் எழுந்​தருளினர்.

சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி தந்த சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை.

முதலில் விநாயகர் சப்​பரத் தேருக்கு தீபா​ராதனை நடை​பெற்​று, பின்​னர் காவல் தெய்​வ​மான கருப்​பண​சாமிக்கு தீபா​ராதனை நடந்​தது.

தொடர்ந்து 6.15 மணிக்கு பெரிய வைரத்​தேரில் எழுந்​தருளிய சுப்​பிரமணிய சுவாமிக்​கும், தெய்​வானைக்​கும் தீபா​ராதனை முடிந்து காலை 6.15 மணி​யள​வில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, தேரோட்​டம் தொடங்​கியது.

பக்​தர்​கள் ‘முரு​க​னுக்கு அரோகரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என முழக்​கம் எழுப்​பியபடி தேரை வடம் பிடித்து இழுத்​தனர். 3.5 கி.மீ. சுற்​றளவுள்ள கிரிவலப் பாதை​யில் மக்​கள் வெள்​ளத்​தில் தேர் அசைந்து ஆடி வந்​தது.

வழிநெடு​கிலும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு முரு​கனை தரிசனம் செய்​தனர். கிரிவலப்​பாதை​யில் வலம் வந்த தேர் மீண்​டும் பகல் 12 மணி​யள​வில் நிலையை அடைந்​தது.

வெளி மாவட்​டங்​களி​லிருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். மாநகர் காவல் துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மாநக​ராட்சி சார்​பில் குடிநீர் வசதி​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

இரவு தங்​கம​யில் வாக​னத்​தில் சுவாமி​யும், அம்​மனும் எழுந்​தருளினர். இதில் ஏராள​மான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். மேலும் 14-ம் நாளான இன்று (ஏப்​.6) காலை தீர்த்​த​வாரி உற்​சவம் நடை​பெறுகிறது.

கொடிமரத்​துக்கு முன்​புள்ள யாக​சாலை​யில் 13 நாள் வைத்து பூஜை செய்த 32 கலசங்​களி​லிருந்து புனிதநீர் மூலம் சுவாமி- தெய்​வானைக்​கும் அபிஷேகம் நடை​பெறும். பின்​னர் சரவணப் பொய்​கை​யில் தீர்த்​த​வாரி உற்​சவம் நடை​பெறும்.

இரவு தங்​கம​யில் வாக​னத்​தில் சுவாமி புறப்​பாடு நடை​பெறும். பின்​னர் கொடி​யிறக்​கத்​துடன் விழா நிறைவு​பெறும். விழா ஏற்​பாடு​களை அறங்​காவலர் குழுத் தலை​வர் சத்​யபிரி​யா, துணை ஆணை​யர் ரா.​ஞான​சேகரன் ஆகியோர் தலை​மை​யில் அறங்​காவலர்​கள், கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

மத நல்​லிணக்கத்தை வலி​யுறுத்​தும் வகை​யில் சிக்​கந்​தர் பாதுஷா பள்​ளி​வாசல் நிர்​வாகம் சார்​பில் பக்​தர்​களுக்கு நீர் மோர், சர்​பத், குளிர் பானங்​களை வழங்​கப்பட்டன. தேரோடும் வீதி​யில் தண்​ணீர் தெளித்து குளிர்​வித்​தனர். வழி நெடு​கிலும் தன்​னார்​வலர்​கள், தனி​யார் அமைப்​பினர் சார்​பில் அன்​ன​தானம், நீர் மோர் வழங்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT