சென்னை: சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவரும் 13-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி கிராம தேவதை உத்தரவு - பாலாத்தம்மன் கோயில் பூஜை, 12-ம் தேதி கணபதி ஹோமம் நடக்கிறது.
ஜூன் 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதையடுத்து ரிஷப வாகன உற்சவம், சூரிய பிரபை, சந்திர பிரபை உற்சவம், அதிகார நந்தி சேவை, ஆகியவை நடைபெற உள்ளன.
ஜூன் 19-ம் தேதி காலை 8.30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 22-ம் தேதி காலை 5.30 மணிக்கு நடராஜ தரிசனம், காலை 9 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
23-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது. 24-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால், பிரம்மோற்சவ விழா மற்றும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.