கோப்புப் படம் : ஆர்.வெங்கடேஷ்

 
ஆன்மிகம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று ஆழித் தேரோட்டம்

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​திருவாரூர் தியாக​ராஜர் கோயி​லில் இன்​று (மார்ச் 29) ஆழித் தேரோட்​டம் நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பாது​காப்பு பணிக்​காக 1,500 போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

திரு​வாரூர் தியாக​ராஜர் கோயில் சைவ சமயத்​தின் தலை​மை​யிட​மாகத் திகழ்​கிறது. இங்​குள்ள ஆழித் தேர் அலங்​கரிக்​கப்​பட்ட நிலை​யில் 96 அடி உயரத்​தில் மிகப் பிரம்​மாண்​ட​மாக காட்​சி​யளிக்​கும். ஆசி​யா​விலேயே மிகப்​பெரிய தேர் என்ற பெருமை கொண்ட இந்த தேரின் மொத்த எடை350 டன் ஆகும்.

          

இந்த வரலாற்றுச் சிறப்​புமிக்க ஆழித்​தேரோட்​டம் இன்று காலை 9.05 மணிக்கு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, நேற்று இரவு அஜபா நடனத்​துடன்தியாக​ராஜர் தேரில் எழுந்​தருளினார். தொடர்ந்​து, இன்று காலை 5.30 மணி​யள​வில் விநாயகர், சுப்​பிரமணி​யர் தேரோட்​டம் நடை​பெற உள்​ளது. பின்​னர், ஆழித்​தேரோட்​ட​மும் தொடர்ந்து கமலாம்​பாள், சண்​டிகேஸ்​வரர் சுவாமிகளின் தேரோட்​ட​மும் நடை​பெறுகிறது.

இந்த ஆழித்​தேர் கீழ​வீ​தி​யில் புறப்​பட்​டு, தெற்கு வீதி, மேல​வீ​தி, வடக்கு வீதி வழி​யாக மீண்​டும் மாலை 6 மணி​யள​வில் நிலை​யடியை வந்து சேர்​கிறது. ஆழித் தேரோட்​டத்​தையொட்​டி, திரு​வாரூர் நகரமே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

தேரோட்ட திரு​விழாவை முன்​னிட்​டு, திரு​வாரூர் மாவட்​டம் மட்​டுமல்​லாது, தமிழகம் முழு​வதும் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வார்​கள் என்​ப​தால், எஸ்​.பி. கருண்​கரட் தலை​மை​யில் 1,500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

மேலும், 4 வீதி​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல தீயணைப்பு வாக​னம், ஆம்​புலன்ஸ் மற்​றும் மருத்​து​வக் குழு தயார் நிலை​யில் உள்​ளன. குறிப்​பாக, நகராட்சி சார்​பில் 4 வீதி​களி​லும் குடிநீர் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. அரசு போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT