சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று ஆடித்தவசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்பாள்.

 
ஆன்மிகம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தென்காசி: சங்​கரன்​கோ​வில் சங்​கர​ நா​ராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திரு விழாவையொட்டி நடை​பெற்ற தேரோட்​டத்​தில் திரளான பக்​தர்கள் கலந்​து​கொண்​டனர்.

தென்​காசி மாவட்​டம், சங்​கரன்​கோ​வில் சங்கர நாராயண சுவாமி கோயி​லில் ஆடித்​த​பசு திரு​விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா நாட்​களில் தின​மும் அம்​பாள் பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை​பெற்று வரு​கிறது.

9-ம் நாள் திரு​விழா​வான நேற்று தேரோட்​டம் நடை​பெற்​றது. இதனை முன்​னிட்டு கோமதி அம்​பாள் நேற்று காலை தேரில் எழுந்​தருளும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

காலை 9.15 மணிக்கு தேரோட்​டம் தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு தேர் இழுத்​தனர். ரத வீதி​களில் வலம் வந்த தேர் காலை 11.15 மணிக்கு நிலை​யத்தை அடைந்​தது.

600 போலீஸார் பாதுகாப்பு

தேரோட்​டத்தை முன்​னிட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அசோக்​கு​மார் தலை​மை​யில் 600-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

விழா​வின் சிகர நிகழ்ச்​சி​யான ஆடித்​த​பசு திரு​விழா நாளை (28-ம் தேதி) நடை​பெறுகிறது. நாளை மதி​யம் 12 மணிக்கு மேல் கோமதி அம்​பாள் தங்​கச்சப்​பரத்​தில் தெற்கு ரத வீதி​யில் உள்ள ஆடித்​த​பசு மண்​டபத்​துக்கு எழுந்​தருளும் நிகழ்ச்சி நடை​பெறும்.

மாலை 4.30 மணிக்கு மேல் சங்​கர​நா​ராயண சுவாமி தவசு காட்​சிக்கு புறப்​படும் நிகழ்​வும், மாலை 6.05 மணிக்கு சங்​கர​நா​ராயண சுவாமி ரிஷப வாக​னத்​தில் கோமதி அம்​பாளுக்கு தவசு காட்சி கொடுக்​கும் நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது.

இரவு 11 மணிக்கு சங்​கரலிங்க சுவாமி யானை வாக​னத்​தில் புறப்​பாடு நிகழ்ச்​சி​யும், இரவு 11.45 மணிக்கு சங்​கரலிங்க சுவாமி கோமதி அம்​பாளுக்கு தவசு காட்​சி கொடுக்​கும்​ நிகழ்ச்​சி​யும்​ நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT