ஆன்மிகம்

திருப்பதி ரதசப்தமி விழாவில் 3.45 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் தகவல்

செய்திப்பிரிவு

திருமலை: ரதசப்​தமி விழா​வில் ஒரே நாளில் மாட வீதி​களில் நடை​பெற்ற வாகன சேவை​களை 3.45 லட்​சம் பக்​தர்​கள் கண்டுகளித்​தனர் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் தெரி​வித்​துள்​ளார்.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் செய்தியாளர்​களிடம் பேசி​ய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, அறங்​காவலர் குழு​வினர் கொடுத்த ஆலோ​சனை​யின்​படி, இம்முறை ரதசப்​தமி விழா வெகு சிறப்​பாக, வெற்​றிகர​மாக நடந்து முடிந்​தது. திரு​மலை வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம், திருச்சானூர் பிரம்​மோற்​சவம், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து, ரதசப்​தமி விழா​வும் வெற்​றிகர​மாக நடந்​த​தில் அதிகாரி​கள், அர்ச்​சகர்​கள், வாக​னங்​களை சுமப்​பவர்​கள் மற்​றும் ஸ்ரீவாரி சேவகர்​களுக்கு எனது மனமார்ந்த நன்​றி​யினை தெரிவித்து கொள்​கிறேன்.

          

வாட்ஸ்-ஆப் மூலம் பக்​தர்​களிட​மிருந்து கருத்​துக்​களை அறிந்துதான் இந்த வெற்​றியை நாங்​கள் சாதிக்க முடிந்​தது. ரதசப்தமிக்கு மட்​டும் ஒரே நாளில் 3.45 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவை​களை கண்டு களித்​துள்​ளனர். இதற்கு துறை சார்ந்த கூட்டு முயற்​சியே காரணம். காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை ரதசப்​தமிக்கு 9.42 லட்​சம் பக்​தர்​களுக்கு அன்​னபிர​சாதம் வழங்கப்​பட்​டுள்​ளது. 6.30 லட்​சம் பேருக்கு சிற்​றுண்​டிகள், 2.90 லட்சம் பேருக்கு பால், 2.15 லட்​சம் குடிநீர் பாட்​டில்​கள் விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

2,200 ஸ்ரீவாரி சேவகர்​கள் அன்று ஒரே நாளில் பக்​தர்​களுக்கு இலவச சேவை புரிந்​துள்​ளனர். 1,800 போலீ​ஸார், 1,414 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்​கள் பாது​காப்பு பணி​களில் சிறப்​பாக ஈடு​பட்​டனர். 1,000 நடன கலைஞர்​கள் மாட வீதி​களில் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தினர். 23,000 பக்​தர்​களுக்கு மருத்​துவ உதவி செய்​யப்​பட்​டது. 93 பேர் திரு​மலை​யில் இருந்து திருப்​பதி அரசு மற்​றும் தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களுக்கு சிகிச்சைக்காக பத்​திர​மாக அனுப்பி வைக்​கப்​பட்​டனர். இவ்​வாறு அனில்​கு​மார் சிங்​கால் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்​ரி, எஸ்பி சுப்​பு​ரா​யுடு, தேவஸ்​தான தலைமை பாது​காப்பு அதி​காரி முரளி கிருஷ்ணா மற்​றும்​ அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT