தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 14-ம் தேதி பிற்பகல் முதல் 16-ம் தேதி முற்பகல் வரை மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், தென்காசி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 305 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.