ஆன்மிகம்

திருமலையில் 2-ம் நாள் பவித்ரோற்சவம்

செய்திப்பிரிவு

திருமலை: திரு​மலை​யில் உள்ள ஏழுமலையான் கோயி​லில் நேற்று 2-ம் நாள் பவித்ரோற்சவம் சிறப்​பாக நடந்​தது. திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் ஒவ்​வொரு ஆண்​டும் வரு​டாந்​திர விழாவாக பவித்​ரோற்​சவம் 3 நாட்​கள் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதன்படி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இவ்​விழா தொடங்​கியது.

2-ம் நாளான நேற்​று, காலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி மற்​றும் மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்​சனம் மற்​றும் ஆராதனை​கள் நடை​பெற்​றன. இதனை தொடர்ந்து விலை உயர்ந்த பட்டு நூல்​களான பவித்ர மாலைகள் உற்சவ மூர்த்​தி​களுக்​கும், விமான வெங்​கடேஸ்​வரருக்​கும் அணிவிக்​கப்​பட்​டது. இதில் ஜீயர்​கள், அர்ச்​சகர்​கள், அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT