சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.

 
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை​யில் மண்டல வழி​பாட்​டுக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்ட ஒரு மாதத்​தில் 26 லட்​சம் பக்​தர்​கள் வரு​கைபுரிந்து சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல வழி​பாட்​டுக்​காக நவ. 16-ம் தேதி மாலை நடை திறக்​கப்​பட்​டது.

டிச. 16-ம் தேதி​யுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலை​யில் தரிசனம் செய்த பக்​தர்​களின் எண்​ணிக்கை விவரங்​களை திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, டிச. 16-ம் தேதி இரவு 8 மணி நில​வரப்​படி 26 லட்​சத்து 81 ஆயிரத்து 460 பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

பல்​வேறு வனப்​பாதை வழியே வந்த பக்​தர்​களின் எண்​ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்​துள்​ளது. அழுதக்​கட​வு-பம்பை வழியே 46,690 பக்​தர்​களும், சத்​திரம்​-சந்​நி​தானம் வனப்​பாதை வழியே 74,473 பேரும் வந்​துள்​ளனர்.

இதே​போல, பம்​பை​யில் இருந்து 25 லட்​சத்து 60 ஆயிரத்து 297 பேர் சபரிமலை சென்​றுள்​ளனர். அதி​கபட்​ச​மாக கடந்த 8-ம் தேதி மட்​டும் ஒரு லட்​சத்து ஆயிரத்து 844 பக்​தர்​கள் தரிசனம் செய்துள்​ளனர்.

வனப்​பாதை வழியாக சபரி: மலைக்கு வரும் ஐயப்ப பக்​தர்​களின் பாது​காப்​புக்​காக பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT