சென்னை: முன்னணி ஓடிடி தளமான ஜீ5, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ள உள்ளடக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், ஏஐ தொழில்நுட்ப கதைகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் எனபல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஜியோ ஸ்டுடியோஸ், மேடாக் ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கே.வி.என் புரோடக்ஷன்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இவற்றை தயாரித்துள்ளன.
தமிழ் பிரிவில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கூஸ் முனிசாமி வீரப்பன்' மற்றும் 'தடயம்' ஆகிய வெப் சீரிஸ்களின் புதிய சீசன்கள் வெளியாகவுள்ளன. மேலும் 'அனந்தகாலம்' மற்றும் சுயாதீன ராப் நிகழ்ச்சியான 'தீக் குரல்' ஆகிய புதிய நிகழ்ச்சிகளும் அறிமுகமாகின்றன. திரைப்பட வரிசையில் அருள்நிதியின் 'டிமான்டி காலனி 3', நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகும் 'ஹாய்!' மற்றும் 'ராவடி' ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளன.
இந்தியில் வருண் தவான், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை', மாதவன் தொகுத்து வழங்கும் 'ஜீனா இசி கா நாம் ஹை 2.0', 'ரங் பாஸ்' சீசன் 4 போன்ற உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கில் 'வெங்கி அனில் 5', 'NBK111', 'ஸ்ரீமதி'; மலையாளத்தில் 'கேரளா அண்டர்கிரவுண்ட்', 'மலாபார் கப்'; கன்னடத்தில் 'பிட்காயின் ஸ்கேம்', 'காரவளி'; மராத்தியில் 'தும்பாட்சி மஞ்சுளா' மற்றும் வங்காளத்தில் 'லால்பஜார்' சீசன் 2 உள்ளிட்ட பல மொழிகளிலான படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.