ஓடிடி தகவல்

திகில், நகைச்சுவையுடன் உருவாகும் வெப் தொடர்

செய்திப்பிரிவு

இன்​றைய தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் ஓவிய கலைகளும், ஓவியர்​களும் அழிந்து கொண்டு இருக்​கின்​றனர். அதன் பின்னணியில் உரு​வாகும் வெப் தொடர் ‘வர்ண கதைகள்’.

இதில் மாறன், சென்ட்​றாயன், ஜெயச்​சந்​திரன், ப்ரணா, ஆர்ஜே புவனேஸ்வரி, நித்யா குயின், ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்​றனர். அஷ்​வின்நோயல் ஒளிப்​ப​திவு செய்​யும் இத்​தொடரை இமானுவேல் எழுதி இயக்​கு​கிறார். ஜே.கே.தமிழ் மீடியா புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஜெயச்​சந்​திரன் தயாரிக்​கிறார்.

இதுபற்றி இமானுவேல் கூறும்​போது,“இன்​றைய தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் ஓவிய கலைகளும், ஓவியர்​களும் அழிந்து கொண்டு இருக்​கின்​றனர். அந்​தக் கலையை அழி​வி​லிருந்து மீட்​டெடுப்​பதற்கான முயற்​சிதான் இந்த வெப் தொடர். சினிமாவில் சாதிக்க வேண்​டும் என்று வாய்​ப்புக்காக காத்​திருக்​கும் 4 நண்​பர்​கள் ஒரு பயணத்​தைத் தொடங்​கு​கின்​றனர்.

அவர்​கள் எதிர்​பாராமல் சந்​திக்​கும் ஒரு​வரிடம் சிக்​கிக்​கொள்கின்றனர். பிறகு என்ன நடந்​தது என்​பதை திகிலுடனும், நகைச்​சுவை கலந்த ஃபேன்​டஸி ஹாரருடனும் இதை உருவாக்குகிறோம்” என்றார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT