பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய படம் தொடங்கி, முதல் சீசன் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசனாகவும் வெளியாக இருக்கும் வெப் தொடர்கள் வரை இந்த வார ஓடிடி தள ரிலீஸ் பட்டியல் இது.
தி பாரடைஸ்: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி பாரடைஸ்'. இந்தப் படத்தில் நானியுடன், மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் இப்படம் அக்டோபர் 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
நா வைஃப் மிஸ்ஸிங்: ஸ்வாதி பிரகாஷ் மந்திரிபிரகதா இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் ‘நா வைஃப் மிஸ்ஸிங்’. இந்த வெப் தொடரில் வருண் சந்தேஷ், ஸ்வேதா பாசு பிரசாத், பிரவீன், ஜபர்தஸ்த் சத்ய ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு உளவியல் த்ரில்லர் அக்டோபர் 22-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வரம்: ஆதித்ய மண்டலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு வெப் தொடர் ‘வரம்’. இதில் விஸ்வதேவ் ரசகொண்டா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஸ்ரீனிவாச அவசரலா, ஸ்ருதி ஜெயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த சூப்பர் நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் அக்டோபர் 22-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சட்டமும் நீதியும் 2: பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற சட்டமும் நீதியும் தொடரின் இரண்டாவது சீசனாக வரும் இந்தத் தொடரில், சரவணன் , வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம் குமார் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்த தமிழ் வெப் தொடர் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
தூமகேது: சுதி மேடிசன் இயக்கதில் வெளியான மலையாள படம் ‘தூமகேது’. இந்தப் படத்தில் சஜின் கோபு, நிகிலா விமல், ஷைம் டாம் சாக்கோ, கணபதி எஸ் பொதுவல், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த டைம் லூப் நகைச்சுவை ஃபேண்டஸி படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அய்யானா மானே சீசன் 2: ரமேஷ் இந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னட வெப் தொடர் ‘அய்யானா மானே சீசன் 2’. இந்த வெப் தொடரில், குஷி ரவி, அக்ஷய் நாயக், மான்சி சுதிர், ரமேஷ் இந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அய்யானா மானே’ வெப் தொடரிம் முதல் சீசன் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியானது. இந்த திகில் உளவியல் த்ரில்லர் ஜீ5 ஓடிடி தளத்தில், அக்டோபர் 23–ம் தேதி வெளியாக உள்ளது.
டோரதி: இளையராஜா இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.