ஓடிடி தகவல்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ முதல் ‘சர்தார் 2’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

ப்ரியா

அதிகம் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி ஏமாற்றிய படம் முதல் சத்தமில்லாமல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இது.

சர்தார் 2: பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் ‘சர்தார் 2’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்' படத்தின் தொடர்ச்சியாக வந்த இப்படத்தில், கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகன், ஆஷிகா  ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 10-ம் தேதி வெளியான இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம், பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

ரோமாஞ்சகம்:  அறிமுக இயக்குநர் வேணு கோபல் ரெட்டி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ரோமாஞ்சகம்’. இந்தப் படத்தில், சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார், உபேந்திர லிமாயே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி படம், அக்டோபர் 1-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பெத்லகேம் குடும்ப யூனிட்: கிரிஷ் ஏ.டி. இயக்கி இருக்கும் மலையாள படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இந்தப் படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷானவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோரட் ஸ்ரீன்டா, மீனாக்ஷி ரவீந்த்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 21-ம் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியாகி வரவேற்பு பெற்ற இந்தப் படம், அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

லவ்: பாலாஜி மோகன் இயக்கி இருக்கும் ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸ் ‘லவ்’. அர்ஜுன் தாஸ், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருக்கும் இந்த சீரிஸ் அக்டோபர் 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மதர் ப்ராமிஸ்: பூர்ணச்சந்திர மைசூர் இயக்கத்தில் வெளிந்த கன்னடப் படம் ‘மதர் ப்ராமிஸ்’. தனஞ்சய், பூர்ணச்சந்திர மைசூர், மகாதேவ் பிரசாத், நாகபூஷன் நாஸ், வினய் பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் காமெடி படம் ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

சன் சிங்கர்: அந்தோணி தாசன், பின்னி கிருஷ்ணகுமார், மனோ நடுவர்களாக பங்குபெறும் இசை நிகழ்ச்சி  ‘சன் சிங்கர்’. இந்த  இசை நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜெயிலர் 2 ரேவ்: ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம், அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்துக்கான இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ம் அனிருத் இசை நிகழ்ச்சியுடன் நடக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பு, அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த இசை வெளியீடு விழா நிகழ்வு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. 

SCROLL FOR NEXT