சமுத்திரக்கனி நடிக்கும் வெப் தொடருக்கு ‘தடயம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். போலீஸ் துறை பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடர் அழுத்தமான த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.“இதற்கு முன்னதாக, சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ திரைப்படம் ஜீ 5 தளத்தில் வெளியானபோது, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, ‘தடயம்’ வெப் தொடரும் நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும்” என்று ஜீ 5 ஓடிடி தளம் தெரிவித்துள்ளது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.