அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பஞ்சாயத்’ வெப் தொடரின் ஐந்தாவது சீசன் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அமேசான் பிரைம் வீடியோ அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், புதிய சீசன் குறித்த போஸ்டரை வெளியிட்டு, ‘சில அன்பும் சில மோதல்களும் இருக்கும். நாங்கள் புலேராவில் உங்களுக்காக காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு பதிவில், ‘பஞ்சாயத்’ தொடரின் அடுத்த சீசன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தது. பின்பு அது ஒரு விளம்பர யுக்தி என அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய 5-வது சீசன் குறித்து வெளியிட்டிருந்த பதிவில், ‘புதிய பழிவாங்கும் தலைமையின் கீழ் இருக்கும் விரோதமான பணிச்சூழலை எதிர்கொண்டு அபிஷேக் தனது எம்பிஏ கனவுக்காக தயாராக வேண்டும். அதற்கு முன்பு புலேராவில் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை முடிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது.
தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் ‘பஞ்சாயத்’ வெப் தொடர், ஜித்தேந்திர குமார் மிஷ்ரா, ரகுபிர் யாதவ், நீனா குப்தா, ஃபைசல் மாலிக், சந்தன் ராய், சான்விகா, துர்கேஷ் குமார், அசோக் பதாக் மற்றும் சுனிதா ராஜ்வர் நடித்துள்ளனர்.