சென்னை: த்ரில்லர் வெப் தொடராக உருவாகியுள்ள ‘ஆக்டோபஸ்’ விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கியுள்ள இந்த தொடர், மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்டதாக உருவாகியுள்ளது. இதில் அஸ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இளம் பெண் திடீரென காணாமல் போவதை தொடர்ந்து, அவரைத் தேட அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்தத் தேடலின் போது வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள், மர்மங்கள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
வெளியாகியுள்ள ப்ரோமோவில் குடியிருப்புவாசிகளின் உரையாடல்கள், திடீர் திருப்பங்கள் மற்றும் நீதிமன்றக் காட்சிகள் என விறுவிறுப்பான பின்னணி இசையுடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 'When Neighbourhood Becomes Family' என்ற கருப்பொருளுடன் உருவாகியுள்ள இந்தத் தொடர் விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது