

சென்னை: ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
டீசரில், வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தானா தோன்றுகிறார். கிராமத்து பின்னணியில், காட்டுப்பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் பரபரப்பான சண்டைக்காட்சிகள் என டீசர் முழுவதும் விறுவிறுப்பு குறையாமல் உள்ளது.
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. 'மைசா' திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.