‘ஸ்பிரிட்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறது.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்பிரிட்’. இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரம்தான் ஆகிறது. பிரபாஸ் வெளிநாடு செல்லவுள்ளதால், அவர் இல்லாத இதர நடிகர்களின் காட்சிகளை காட்சிப்படுத்த உள்ளது படக்குழு. இதனை டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.160 கோடிக்கு கைப்பற்றி இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இந்த விற்பனை நடைபெற்றுள்ளது. ‘அனிமல்’ வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி வரும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தெலுங்கில் ‘புஷ்பா 2’ படத்தை ரூ.250 கோடிக்கும் அதிகமாக ஓடிடி உரிமை விற்பனையானது. அதற்குப் பிறகு அதிக விலைக்கு போன ஓடிடி உரிமை என்றால் அது ‘ஸ்பிரிட்’ படம்தான். இப்படத்தில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார்கள்.