ஓடிடி தகவல்

உரு​வாகிறது ‘த ஃபேமிலி மேன் 4’ - மனோஜ் பாஜ்​பாய் உறுதி

செய்திப்பிரிவு

‘த ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் 4-வது சீசன் உரு​வாகும் என்று நடிகர் மனோஜ் பாஜ்​பாய் தெரி​வித்​துள்​ளார்.

அமே​சான் பிரைமில் வெளி​யான ‘தி ஃபேமிலிமேன் ’ வெப்​தொடரை, ராஜ் மற்​றும் டீகே இயக்​கினர். இதில் மனோஜ் பாஜ்​பாய், ஸ்ரீகாந்த் திவாரி என்ற ஸ்பை​யாக நடித்​திருந்​தார்.

பிரி​யாமணி, நீரஜ் மாதவ், சரத் கெல்​கர் உட்பட பலர் நடித்த இந்​தத் தொடர் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, இதன் 2-ம் சீசன் உரு​வானது. அதில் சமந்​தா, ஈழப் போராளி​யாக நடித்​திருந்​தார். இந்த தொடரும் வரவேற்​பைப் பெற்​றது. இதன் 3-வது சீசன் சமீபத்​தில் வெளி​யாகி இருக்​கிறது. 7 எபிசோடு​களை கொண்ட இந்த வெப் தொடரும் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் இத்​தொடரைப் பார்த்​து​விட்டு பார்​வை​யாளர் ஒரு​வர், “இத்​தொடரின் முடிவை அந்​தரத்​தில் விட்டு விட்​டீர்​கள். மீத​முள்ள எபிசோட் அடுத்து வரு​மா?” என்று இயக்​குநர்​கள் மற்​றும் மனோஜ் பாஜ்​பாயை டேக் செய்து கேட்​டிருந்​தார். அதற்​குப் பதிலளித்த மனோஜ், “உங்​கள் கேள்விக்​கான பதில் சீசன் -4-ல் கிடைக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார். இதனால் இதன் அடுத்த சீசனும் உருவாவது உறு​தி​யாகி இருக்​கிறது.

SCROLL FOR NEXT