‘தி ஃபேமிலிமேன் 3’ வெப் தொடரில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி!

‘தி ஃபேமிலிமேன் 3’ வெப் தொடரில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி!
Updated on
1 min read

அமேசான் பிரைமில் 2019-ம் ஆண்டு வெளியான வெப் தொடர் ‘தி ஃபேமிலிமேன்’. ராஜ் மற்றும் டீகே இயக்கிய ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் தொடரான இதில் மனோஜ் பாஜ்பாய், ஸ்ரீகாந்த் திவாரி என்ற ஸ்பையாக நடித்திருந்தார். பிரியாமணி, நீரஜ் மாதவ், சரத் கெல்கர் உட்பட பலர் நடித்த இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் 2-ம் சீசன் உருவானது.

அதில் சமந்தா, ஈழப் போராளியாக நடித்திருந்தார், கதை தமிழ்நாட்டில் நடப்பது போலவும் அமைக்கப் பட்டிருந்தது. கடும் விமர்ச னத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த தொடரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 3-வது சீசன் நேற்று வெளியாகியுள்ளது. 7 எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் தொடரின் கதை, வடகிழக்கு மாநிலங்கள், லண்டன், இஸ்லாமாபாத், மியான்மர், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

முதல் சீசன் செப்டம்பர் 20, 2019 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் அதிக விளம்பரம் இல்லாமல் திரையிடப்பட்டது, ஆனால் சில நாட்களுக்குள், அது நாடு தழுவிய பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சீசன் 2, ஜூலை 4, 2021 அன்று வந்தது, இதுவும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது, தி ஃபேமிலி மேன் சீசன் 3 நவ.21-ஆம் தேதி (நேற்று) வெளியானது, இந்த ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ் மற்றும் டிகே இயக்கிய ‘ஃபார்ஸி’ (2023) வெப் தொடரில் மைக்கேல் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் இதிலும் கவுரவ வேடத்தில் வருகிறார்.

சில நிமிடங்கள் மட்டுமே அவர் வந்தாலும் கதைக் களத்துக்கு முக்கியமானதாக அமைந்திருக்கிறது என்றும் அவருக்கும் மனோஜ் பாஜ்பாயிக்குமான கெமிஸ்ட்ரி வரவேற்பைப் பெறும் என்றும் கூறுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in