ஓடிடி தகவல்

13 மொழிகளில் ‘மேட் இன் கொரியா’

ப்ரியா

பிரி​யங்கா மோகன் நடித்​துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தை ரா.​கார்த்​திக் இயக்​கி​யுள்​ளார். ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் நிதி சாகர் தயாரித்​துள்ள இப்​படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்​தில் மார்ச் 12-ல் வெளி​யாகிறது.

இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் கார்த்​திக் கூறும்​போது, “‘நித்​தம் ஒரு வானம்’ படத்​துக்​குப் பிறகு இது என் 2-வது படம். சரி​யான திட்​ட​மிடு​தல் இல்லை என்​றால் கொரி​யா​வில் படமாக்​கு​வது கஷ்டம்.

இது நான் அங்கு கற்​றுக்​கொண்ட பெரிய விஷ​யம். இந்​தப் படத்தை 13 மொழிகளில் டப் செய்​தும் 36 மொழிகளில் சப்​டைட்​டிலுடனும் நெட்ஃபிளிக்ஸ் வெளி​யிடு​வ​தால் அதிக ரீச் கிடைக்​கும்.

          

அதனால், ஓடிடி​யில் நேரடி​யாக இந்​தப் படம் வெளி​யா​வது மகிழ்ச்​சி. இன்​றைய தலை​முறை​யினர் பலரும் கே-டி​ராமா ரசிகர்​கள். அவர்​களுக்கு ஒரு​முறை​யா​வது கொரியா போக வேண்​டும் என்ற ஆசை இருக்​கும். அவர்​கள்​தான் இந்​தப் படத்​தின் மெயின் ஆடியன்​ஸ்” என்​றார்.

பிரி​யங்கா மோகன் கூறும்​போது, “இதன் படப்​பிடிப்​பில் அதி​க​மான கொரிய வார்த்​தைகளைக் கற்​றுக்​கொண்​டேன். அதே போல ‘தளப​தி’ படத்​தின் சுந்​தரி பாடலை​யும் நிறைய தமிழ் வார்த்​தைகளை​யும் அங்​குள்​ளவர்​களுக்​குச் சொல்​லிக் கொடுத்​திருக்​கிறோம். இயக்​குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்​ஸ்​பிரேஷ​னாக வைத்​து​தான் இந்​தக் கதையை அவர் உரு​வாக்கி இருக்​கிறார்” என்​றார்.

SCROLL FOR NEXT