புறநகர் பகுதியில் இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தொடர், ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’. இதில் திவ்யா கணேசன், இன்ஸ்பெக்டர் சத்யா மணிமாறனாகவும், ஸ்ரீது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீரா இளங்கோவனாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் தனது டி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்துள்ள இந்த க்ரைம் காமெடி தொடர், சோனி விழா தொலைக்காட்சியில் டிச. 14-முதல் தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
திவ்யா கணேசன் கூறும்போது, “சத்யா கதாபாத்திரத்தில் என்னைக் கவர்ந்தது, அவர் அணிந்திருக்கும் சீருடை மட்டுமே அவரது பலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான். இந்தத் தொடரில் விசாரணை, எதிர்பாராத சம்பவங்களுடன் நிறைய அன்பும் நகைச்சுவையும் இருக்கிறது. ஒவ்வொரு வழக்கையும் இந்தக் குழுவினர் எப்படித் தீர்க்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.