ரிஷிகாந்த், அப்துல் லீ, மவுரிஷ் தாஸ், அத்விதா ஆறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி, நந்திதா குமார் உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர், ‘லோக்கல் டைம்ஸ்’. 7 எபிசோடுகளை கொண்ட தமிழ் காமெடி-டிராமா தொடரான இதை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்.
அவர் கூறும்போது, “தங்கள் கனவுகளைத் துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இது இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்” என்றார். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த வெப் தொடரை அபிநவ் கஸ்தூரா, சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். பிரைம் வீடியோவில் மார்ச் 13-ல் வெளியாகும் இதை ஃபேன்பாய் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.